» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடி மாவட்ட எல்கைகளில் தமிழக முதல்வருக்கு வரவேற்பு

வெள்ளி 7, ஆகஸ்ட் 2020 12:29:18 PM (IST)திருநெல்வேலியில் அரசு நிகழ்ச்சிகளில் பங்கேற்க வந்த தமிழக முதல்வருக்கு தூத்துக்குடி மாவட்ட எல்கையில் அமைச்சர் கடம்பூர் செ.ராஜூ தலைமையில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. 

தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி மு.பழனிசாமி இன்று திருநெல்வேலியில் நடைபெறும் திருநெல்வேலி மற்றும் தென்காசி மாவட்டங்களின் வளர்ச்சி திட்ட பணிகள் மற்றும் கரோனா நோய் தடுப்பு பணிகள் தொடர்பான ஆய்வு கூட்டம் மற்றும் பயனினாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக செல்லும் வழியில், தூத்துக்குடி மாவட்ட எல்லையில் செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் செ.ராஜூ தலைமையில் வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. 

முதலமைச்சருக்கு அமைச்சர் மலர்கொத்து வழங்கி வரவேற்றார். மேலும் மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி, ஸ்ரீவைகுண்டம் சட்டமன்ற உறுப்பினர் எஸ்.பி.சண்முகநாதன், விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் சின்னப்பன், மாவட்ட அறங்காவலர் குழு தலைவர் மோகன், பரமக்குடி சட்டமன்ற உறுப்பினர் சதன்பிரபாகரன், முக்கிய பிரமுகர் ஆறுமுகநயினார் ஆகியோர் முதல்வருக்கு மலர்கொத்து வழங்கி வரவேற்றனர். தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் புத்தகம் வழங்கி வரவேற்றார். நிகழ்ச்சியில் கோவில்பட்டி வட்டாட்சியர் மணிகண்டன் மற்றும் அலுவலர்கள், முக்கிய பிரமுகர்கள் கலந்துகொண்டனர்.


மக்கள் கருத்து

KUBERANAug 9, 2020 - 08:24:58 PM | Posted IP 173.2*****

Yenna Paa, Thalla Yaa Kanoom ? See.Thaa.CHELAAPANDIAN na neenga madikavee illaya ?

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads
Black Forest CakesAnbu CommunicationsThoothukudi Business Directory