» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடியில் கரேனாவால் மேலும் இருவர் பலி : இன்று புதிதாக 239 பேருக்கு தொற்று உறுதி!!

வியாழன் 6, ஆகஸ்ட் 2020 7:13:15 PM (IST)

தூத்துக்குடியில் இன்று கரேனாவால் இருவர் உயிரிழந்தனர். மாவட்டத்தில் இன்று புதிதாக 239 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 

தூத்துக்குடி மாவட்டத்தில் கரோனா வைரஸ் தாக்கம் உச்சத்தை எட்டி வந்தது. இந்த நிலையில் கடந்த சில நாட்களாக கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை மெல்ல மெல்ல குறையத் தொடங்கி உள்ளது. அதே நேரத்தில் காய்ச்சல் சிறப்பு முகாம்கள் மற்றும் சளி மாதிரிகள் சேகரிப்பு முகாம்கள் அதிகரிக்கப்பட்டு உள்ளது. இதனால் தினமும் 2 ஆயிரத்து 500-க்கும் அதிகமான மாதிரிகள் சேகரிக்கப்பட்டு பரிசோதனை நடத்தப்பட்டு வருகிறது.

இந்நிலையில், தூத்துக்குடி மாவட்டத்தில் இன்று மட்டும் புதிதாக 246பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர்களையும் சேர்த்து மாெத்த பாதிப்பு 8,450 ஆக உயர்ந்துள்ளது. 246 பேர் சிகிச்சை பெற்று குணமடைந்து வீடு திரும்புள்ளனர்.  இதனால் குணமடைந்தோர் 6557 ஆக அதிகரித்துள்ளது. தற்போது 1832பேர் மட்டுமே சிகிச்சை பெற்று வருகின்றனர். இன்று 2 பேர் பலியானதையடுத்து மாவட்டத்தில் இதுவரை 61 பேர் உயிரிழந்துள்ளனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored AdsBlack Forest Cakes


Anbu Communications

Thoothukudi Business Directory