» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

பெயிண்டர் வெட்டி படுகொலை: போலீசார் விசாரணை

வியாழன் 6, ஆகஸ்ட் 2020 12:00:05 AM (IST)

கோவில்பட்டியில் பெயிண்டரை வெட்டிக்கொலை செய்த மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி பாரதிநகர் கருமாரியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் மாடசாமி. இவருடைய மகன் கோடீஸ்வரன் (30). இவர் பெயிண்டராக வேலை செய்து வந்தார். இன்று மாலையில் கோடீஸ்வரன் பாரதிநகர் மேட்டுத்தெருவில் உள்ள நகராட்சி நடுநிலைப்பள்ளி அருகே தனது மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது அரிவாள், கத்தி உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களுடன் அங்கு பதுங்கி இருந்த மர்மநபர்கள் அவரைவழிமறித்து ஓட ஓட விரட்டி அரிவாளால் வெட்டி படுகொலை செய்துவிட்டு தப்பிச்சென்றுவிட்டனர். 

பொதுமக்கள் நடமாட்டம் மிகுந்த பகுதியில் நடந்த கொலை சம்பவத்தைப் பார்த்த அப்பகுதி மக்கள் அதிர்ச்சி அடைந்தனர். இது குறித்து தகவல் கிடைத்ததும் கோவில்பட்டி டி.எஸ்.பி. கலைகதிரவன், ஆய்வாளர்கள் சுதேசன், ‌ சுகாதேவி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் குறித்து மேற்கு காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

போலீசாரின் முதற்கட்ட விசாரணையில், கோடீஸ்வரனுக்கும், கடலையூரைச் சேர்ந்த ராக்கம்மாள் என்பவருக்கும் கடந்த ஓராண்டுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. பின்னர் கணவன், மனைவிக்கு இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் அவரது மனைவி கணவரை விட்டு பிரிந்து, கடலையூரில் உள்ள பெற்றோரின் வீட்டுக்கு சென்று விட்டார். இந்நிலையில்தான் கோஸ்சுவரன் கொலை செய்யப்பட்டுள்ளார். இதனல் குடும்ப பிரச்சினையில் கோடீஸ்வரன் கொலை செய்யப்பட்டாரா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.


மக்கள் கருத்து

Madhu kumarAug 6, 2020 - 10:44:14 AM | Posted IP 162.1*****

Very lethargic

MuruganAug 6, 2020 - 10:34:56 AM | Posted IP 173.2*****

Kodumai

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads
Anbu CommunicationsBlack Forest CakesThoothukudi Business Directory