» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

அயோத்தியில் ராமர் கோவில் கட்ட எதிர்ப்பு : காயல்பட்டிணத்தில் எஸ்டிபிஐ. கட்சி ஆர்ப்பாட்டம்!

புதன் 5, ஆகஸ்ட் 2020 7:35:22 PM (IST)தூத்துக்குடி மாவட்டத்தில் அயோத்தில் ராமர் கோவில் கட்டும் பணியை கைவிட வேண்டும் உட்பட நான்கு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி எஸ்.டி.பி.ஐ. கட்சியினர் அறவழியில் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

நாடு முழுவதும் எஸ்.டி.பி.ஐ. கட்சி சார்பில் நான்கு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி சமூக இடைவெளியுடன் அறவழி ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன. தூத்துக்குடி மாவட்டம் காயல்பட்டிணத்தில் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு நகர தலைவா் அஜ்ஹா் தலைமை வகித்தார். மாவட்ட பெதுச்செயலாளா் உஸ்மான் மற்றும் மாவட்ட துனைத்தலைவா் முஹம்மது உமா் மாவட்ட செயலாளா் அஜிஸ், SDTU மாவட்ட தலைவா் முகைதீன் அப்துல் காதர், பாப்புலா் ப்ரண்ட் ஆஃப் இந்தியா மாவட்ட செயலாளா் சம்சு மரைக்காயா் ஆகியோர் முன்னிலை வகித்தனர். 

ஆர்ப்பாட்டத்தில் பாபரி மஸ்ஜிதை தகர்த்துவிட்டு அந்த இடத்தில் ராமர் கோயில் கட்டுவது என்பது உலகளவில் இந்தியர்களுக்கு பெரும் அவமானத்தை ஏற்படுத்தும் செயலாகும் என்பதால், மத்திய அரசு ராமர் கோயில் கட்டும் திட்டத்தை கைவிட வேண்டும் என்பதை வலியிறுத்தியும், காஷ்மீருக்கு மீண்டும் சிறப்பு அந்தஸ்தை வழங்கி அங்கு நடக்கும் அத்துமீறலை நிறுத்த வேண்டும், பொருளாதார பேரழிவை கொரோனாவால் மறைக்காமல் நல்ல நிர்வாகத்தை வழங்கிட வேண்டும் போன்ற நான்கு அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி சமூக இடைவெளியுடன் முக கவசம் அணிந்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. காயல் நகர செயலாளா் அப்துல் ரஹ்மான் நன்றி கூறினார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


Black Forest Cakes

Anbu CommunicationsThoothukudi Business Directory