» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடியில் கரோனா தடுப்பு பணிகள் ஆய்வு கூட்டம் : சுகாதாரத்துறை செயலர் தலைமையில் நடந்தது!

புதன் 5, ஆகஸ்ட் 2020 4:49:49 PM (IST)தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சுகாதாரத்துறை செயலர் ஜெ.ராதாகிருஷ்ணன், தலைமையில் கரோனா நோய் தொற்று தடுப்பு மற்றும் விழிப்புணர்வு பணிகள் குறித்த ஆய்வு கூட்டம் நடைபெற்றது

தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சுகாதாரத்துறை செயலர் ஜெ.ராதாகிருஷ்ணன், தலைமையில் கரோனா நோய் தொற்று தடுப்பு மற்றும் விழிப்புணர்வு பணிகள் குறித்த ஆய்வு கூட்டம் இன்று (05.08.2020) நடைபெற்றது. கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி, ; முன்னிலை வகித்தார். கூட்டத்தில் சுகாதாரத்துறை செயலர் ஜெ.ராதாகிருஷ்ணன், பேசியதாவது: முதலமைச்சர் அவர்களின் வழிகாட்டுதல்படி, தமிழகம் முழுவதும் மேற்கொள்ளப்பட்டு வரும் கரோனா தடுப்பு நடவடிக்கைகள் மாவட்ட வாரியாக ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதனடிப்படையில் தூத்துக்குடி மாவட்டத்தில் மாவட்ட நிர்வாகத்தின் சார்பாக கரோனா தடுப்பு நடவடிக்கைகள் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகின்றன. 

அதன் காரணமாக தமிழகத்திலேயே தூத்துக்குடி மாவட்டத்தில்தான் இறப்பு விகிதமானது மிக குறைந்த அளவான 0.7 சதவீதம் என்ற அளவில் உள்ளது. இதற்காக பாடுபட்டு வரும் அரசு அலுவலர்களுக்கு பாராட்டுக்களை தெரிவித்துக்கொள்வதுடன் மேலும் தொழிற்சாலைகள் அதிகம் உள்ள இந்த மாவட்டத்தில் நோய் தொற்று பரவுவதை தவிர்க்கும் வண்ணம் உரிய பாதுகாப்புடன் தொழிற்சாலைகள் இயங்குகின்றனவா என்பதை உறுதி செய்து கொள்ள அறிவுறுத்தினார். கிராம பகுதிகளில் உள்ள பொதுமக்கள் தண்ணீர் பிடித்தல், பொருட்கள் வாங்குதல் போன்ற அன்றாட நடவடிக்கைகளில் ஈடுபடும்போது உரிய சமூக இடைவெளி பின்பற்றுதல் மற்றும் முககவசம் அணிவதன் அவசியம் குறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். தொடர்ந்து தீவிர நடவடிக்கைகள் மூலமாக இந்த நோய் தொற்று பரவலை முழுமையாக தடுக்க வேண்டும் என பேசினார்.

கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி பேசியதாவது: தூத்துக்குடி மாவட்டத்தை பொறுத்தவரை இதுவரை 75,000க்கும் மேற்பட்ட கரோனா தொற்று பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இவற்றில் 8,000 கரோனா தொற்று பாதிக்கப்பட்டோர் கண்டறியப்பட்டுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்தை பொறுத்தவரை தினசரி 2,000 என்ற அளவில் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. தமிழ்நாடு முதலமைச்சர் ஆணைக்கிணங்க இந்த பரிசோதனை அளவானது தினசரி 2,800 என்ற அளவில் உயர்த்தப்பட்டுள்ளது. கரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதற்காக அரசு மருத்துவமனைகளில் 1,100 படுக்கைகள் தயார் நிலையில் உள்ளன. மேலும் எந்தவித நோய் அறிகுறியும் இன்றி கரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நபர்கள் கோவிட் கேர் சென்டர் மூலமாக தொடர் கண்காணிப்பில் வைக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றனர் என பேசினார்.

கூட்டத்தில் தூத்துக்குடி மாநகராட்சி ஆணையர் ஜெயசீலன், கூடுதல் ஆட்சியர் (வருவாய்) விஷ்ணுசந்திரன், தூத்துக்குடி சார் ஆட்சியர் சிம்ரோன் ஜீத் சிங் காலோன், தூத்துக்குடி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை முதல்வர் ரேவதி, தூத்துக்குடி சுகாதார பணிகள் துறை இணை இயக்குநர் (பொ) பொன் இசக்கி, சுகாதார பணிகள் துணை இயக்குநர்கள் கிருஷ்ணலீலா(தூத்துக்குடி), அனிதா (கோவில்பட்டி), உதவி இயக்குநர் (ஊராட்சிகள்) உமாசங்கர் மற்றும் அலுவலர்கள் கலந்துகொண்டனர்.


மக்கள் கருத்து

JebaAug 6, 2020 - 10:12:57 AM | Posted IP 108.1*****

Collector gud work

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored AdsAnbu Communications

Black Forest Cakes


Thoothukudi Business Directory