» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

ஆரம்ப சுகாதார நிலையத்தில் சித்த மருத்துவ பிரிவு : அமைச்சர் கடம்பூர் செ.ராஜூ திறந்து வைத்தார்.

புதன் 5, ஆகஸ்ட் 2020 4:42:42 PM (IST)வல்லநாடு அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் ரூ.15 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட சித்த மருத்துவ பிரிவிற்கான புதிய கட்டிடத்தை அமைச்சர் கடம்பூர் செ.ராஜூ திறந்து வைத்தார்.

தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் வட்டம் கருங்குளம் மற்றும் செக்காரக்குடியில் மகளிர் சுயஉதவிக் குழு கூட்டமைப்பு கட்டிடம் கட்டுவதற்கு பூமி பூஜை மற்றும் அடிக்கல் நாட்டி பணிகளை துவக்கி வைக்கும் நிகழ்ச்சி மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி, தலைமையில் இன்று (05.08.2020) நடைபெற்றது. நிகழ்ச்சியில் செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் செ.ராஜூ பூமி பூஜையில் கலந்துகொண்டு அடிக்கல் நாட்டி பணிகளை துவக்கி வைத்தார். நிகழ்ச்சியில் திருவைகுண்டம் சட்டமன்ற உறுப்பினர் எஸ்.பி.சண்முகநாதன் முன்னிலை வகித்தார்.

பின்னர் அமைச்சர் கடம்பூர் செ.ராஜூ பேசியதாவது: தமிழகத்தை பொறுத்த வரையில் முதலமைச்சர் மார்ச் 23 முதல் ஊரடங்கை அறிவித்து மக்களும் வாழ்வாதாரத்தை பாதிக்கப்பட கூடாது என்பதற்கு தளர்வுகளை அறிவித்து பொருளாதாரத்தை பாதுகாக்க தாராளமாக நிதி உதவிகளை வழங்கி மக்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க அம்மா அவர்களின் அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. தளர்வின் காரணமாக மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கபடாத நிலை உருவாகியுள்ளது. இருந்தாலும் இதற்கு ஒரே தீர்வு மருத்துவ குழுவானாலும் சரி, உலக சுகாதார நிறுவனம் ஆனாலும் சரி தனித்திருக்க வேண்டும், சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும், மாஸ்க் அணிய வேண்டும் போன்ற பல்வேறு விதிமுறைகளை அறிவித்து இருக்கிறது. 

அதை முழுமையாக நாம் கடைபிடித்தால் இந்த தொற்றில் இருந்து நம்மை முழுமையாக பாதுகாத்து கொள்ள முடியும் என்ற விழிப்புணர்வை அரசு தினந்தோறும் மக்களுக்கு அறிவுறுத்தி வருகிறது. இதை முழுமையாக கடைபிடித்தால்தான் தொற்றில்இருந்து காப்பாற்றிக்கொள்ள முடியும் என்று மாவட்ட நிர்வாகமும் அறிவுறுத்தி வருகிறது. நமது மாவட்டத்தில் அதிகபட்சமாக இதுவரை 78,000 மாதிரிகள் சேகரிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் தூத்துக்குடி மருத்துவ கல்லூரியில் 3 பரிசோதனை மையங்களை வழங்கியதன் காரணமாக இந்த அளவுக்கு அதிகமான நபர்களுக்கு மாதிரிகள் சேகரிக்கப்பட்டு தொற்று நோயினை கண்டறியும் நிலையினை நாம் பெற்றிருக்கிறோம். 

இதுவரை 8,000 பேர்களுக்கு தொற்று அறிகுறி கண்டறியப்பட்டு அதிலும் 0.6 சதவிதம்தான் இறப்பு சதவீதம் தமிழகத்திலேயே நமது தூத்துக்குடி மாவட்டத்தில்தான் குறைவான இறப்பு சதவீதம் உள்ளது. இதற்கு சரியான, தேவையான வழிமுறைகளை, நடைமுறைகளை எடுத்து பாதிக்கப்பட்ட பொதுமக்களை கண்டறிந்து அவர்களை தனிமைப்படுத்தி அவர்களுக்கு தேவையான முறையான சிகிச்சைகளை அளித்ததன் காரணமாகதான் இந்த நிலையை நமது மாவட்டம் அடைந்திருக்கிறது. இந்த வகையில் முதலமைச்சர் தமிழகத்தில் மார்ச் 23 அன்று தொடங்கி ஒரு நாள் கூட இடைவெளி இல்லாமல் நாளும் பொழுதும் இந்த கரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். தொடர்ந்து சென்னை மட்டும் அல்லாமல் பல்வேறு மாவட்டங்களிலும் நேரடியாக சென்று ஆய்வு செய்துள்ளார்.

நாளை மறுநாள் கூட திருநெல்வேலி மாவட்டத்திற்கு வருகை தர உள்ளார். இன்று சுகாதாரத்துறை செயலாளர் நமது மாவட்டத்திற்கு வருகை தந்து ஆய்வு செய்ய உள்ளார். அந்த அளவிற்கு நாள்தோறும், தினசரி நமது மாவட்டத்திலே மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்து நோயின் தாக்கம் இன்று படிப்படியாக குறைந்து வருகிறது. இந்த நிலையில் தமிழ்நாடு முதலமைச்சர் அரசு கரோனா தடுப்பு நடவடிக்கைகளை முழு வீச்சில் செய்து வந்தாலும் கூட வளர்ச்சி திட்ட பணிகளை மக்களுக்கு தொய்வின்றி கிடைக்க வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளார். நமது மாவட்டத்தில் பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகள் நாள்தோறும் நடைபெற்று வருகிறது. நேற்றுமுன்தினம் கூட விளாத்திகுளத்தில் புதிய வட்டாட்சியர் அலுவலத்திற்கு அடிக்கல் நாட்டப்பட்டது. 

இன்று செக்காரக்குடியில் ரூ.73.72 லட்சம் மதிப்பில் மகளிர் சுயஉதவிக் குழு கூட்டமைப்பு கட்டிடத்திற்கு பூமி பூஜை நடைபெற்றது. அதற்கு அடுத்தபடியாக இன்று வல்லநாட்டில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில் ரூ.15 லட்சம் மதிப்பில் சித்தா மருத்துவ பரிவுக்கு என்று தனி கட்டிடம் கட்டப்பட்டு திறந்து வைக்கப்படுகிறது. அதற்கு அடுத்தபடியாக கருங்குளத்தில் மகளிர் சுயஉதவிக் குழு கூட்டமைப்பு கட்டிடம் ரூ.73.23 லட்சம் மதிப்பில் கட்டுவதற்கு அடிக்கல் நாட்டப்படுகிறது. நாள்தோறும் மக்களின் அன்றாட தேவைகளையும், வளர்ச்சி பணிகளையும் தடைபடாமல் இந்த கரோனா பணிகளுக்கு இடையில் பார்க்க வேண்டும் என்று முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளாதால் பணிகளும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது என பேசினார்.

தொடர்ந்து செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் செ.ராஜூ , வல்லநாடு அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் ரூ.15 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட சித்த மருத்துவ பிரிவிற்கான புதிய கட்டிடத்தை திறந்து வைத்தார். நிகழ்ச்சியில் தூத்துக்குடி சார் ஆட்சியர் சிம்ரோன் ஜீத் சிங் காலோன், மாவட்ட அறங்காவலர் குழு தலைவர் மோகன், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் தனபதி, ஊரக வளர்ச்சி முகமை செயற்பொறியாளர் சங்கரேஸ்வரி, தூத்துக்குடி சுகாதார பணிகள் துணை இயக்குநர் கிருஷ்ணலீலா, மற்றும் அலுவலர்கள், முக்கிய பிரமுகர்கள் கலந்துகொண்டனர்.


மக்கள் கருத்து

AlawarAug 6, 2020 - 10:45:09 AM | Posted IP 162.1*****

Well equipped move

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


Anbu Communications

Black Forest CakesThoothukudi Business Directory