» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

ராமர் கோவில் அடிக்கல்: தூத்துக்குடியில் பாஜக இனிப்பு வழங்கி கொண்டாட்டம்

புதன் 5, ஆகஸ்ட் 2020 3:57:20 PM (IST)அயோத்தியில் ராமர் கோவிலுக்கு அடிக்கல் நாட்டப்பட்டதையொட்டி தூத்துக்குடியில் பாஜகவினர் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி கொண்டாடினர் 

அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவதற்கு பிரதமர் நரேந்திர மோடி அடிக்கல் நாட்டினார். இதை கொண்டாடும் வகையில் தூத்துக்குடி தெற்கு மாவட்ட இளைஞர் அணி பாரதிய ஜனதா கட்சியின் மாவட்ட பொருளாளர் ஏபி கண்ணன் தலைமையில் தூத்துக்குடி சிவன் கோவில் தேரடி அருகில் வைத்து பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் மாவட்ட இளைஞர் அணி பொதுச் செயலாளர் குலசை ரமேஷ், தெற்கு மண்டல மண்டல நகர தலைவர் சின்னத்தங்கம், மாவட்ட இளைஞர் அணி செயற்குழு உறுப்பினர் சுரேஷ், வடக்கு மண்டல இளைஞரணி தலைவர் நாகராஜ், மற்றும் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.புதுக்கோட்டையில் கொண்டாட்டம்
புதுக்கோட்டை பஜாரில்  பாஜகவினர் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி கொண்டாடினர். இந்த நிகழ்ச்சியில் தூத்துக்குடி தெற்கு ஒன்றிய தலைவர் இளங்கோவன் தலைமையில், மாநில செயற்குழு உறுப்பினர் வழக்கறிஞர் சந்தனகுமார் மற்றும் நெல்லை மாவட்ட பார்வையாளர் பாலாஜி, மாவட்ட துணைத்தலைவர் கலாதேவி தேசிய பொதுக்குழு உறுப்பினர் முனியசாமி, ஒன்றிய பொதுச் செயலாளர்  விஸ்வநாத், சிறுபான்மை பிரிவு மாவட்ட பொறுப்பாளர் ஜெபக்குமார் மற்றும் கிளை தலைவர்கள் கட்சி தொண்டர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.


மக்கள் கருத்து

யாசர் அரபாத்Aug 7, 2020 - 11:43:24 AM | Posted IP 162.1*****

அதிகமான கூட்டம் ராமருக்கும் தமிழ்நாட்டுக்கும் சம்மந்தமில்லைராமர் வடநாட்டுச் சாமி அப்பம் தமிழ்நாட்டு சாமி முருகனுக்கு இடம் இல்லையா

RajaAug 6, 2020 - 01:07:01 AM | Posted IP 108.1*****

Jai Modi sarkar

ArasaamuthuAug 5, 2020 - 11:41:04 PM | Posted IP 173.2*****

அட நாதாரிகளா நாடு பின்னுக்கு போய்ட்டு இருக்கு. கொஞ்சமாவது உணர்வடையுங்கள்.

kumarAug 5, 2020 - 05:03:36 PM | Posted IP 162.1*****

jai sri ram....

K.ganeshanAug 5, 2020 - 04:34:10 PM | Posted IP 162.1*****

Good celebration. Lord Rama bless you all

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads
Black Forest CakesAnbu CommunicationsThoothukudi Business Directory