» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

மின்வாரிய உதவி பொறியாளர் நியமிக்க கோரி பாஜக ஆர்ப்பாட்டம்!!

புதன் 5, ஆகஸ்ட் 2020 8:13:00 AM (IST)எட்டயபுரம் மின்வாரிய அலுவலகத்திற்கு நிரந்தர உதவி பொறியாளர் நியமனம் செய்திட வலியுறுத்தி பா.ஜ.க சார்பில்  ஆர்ப்பாட்டம் நடந்தது. 

எட்டயபுரம் மின்வாரிய அலுவலகத்திற்கு நிரந்தர உதவி பொறியாளர் நியமனம் செய்திட வலியுறுத்தியும், உயிரிழப்பை தடுக்கும் வகையில் எட்டயபுரம் நகரில் மின் கட்டண வசூல் மையம் அமைத்திட வலியுறுத்தியும், கூடுதல் வயர்மென் தேவை உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி  எட்டயபுரம் ஒன்றிய பாஜக சார்பில் வடக்கு மாவட்ட தலைவர் ராமமூர்த்தி தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.  

ஆர்ப்பாட்டத்தில் வடக்கு மாவட்ட செயலாளர் ஆத்திராஜ், எட்டயபுரம் ஒன்றிய பாஜக தலைவர் ராம்கி ஆகியோர் முன்னிலை வகித்தனர். மகளிரணி பொறுப்பாளர் முத்துமாரி, அமைப்பு சாரா மாவட்ட பொறுப்பாளர் முனியராஜ் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். இறுதியில் பொது செயலாளர் நாகராஜன் நன்றி கூறினார்


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


Black Forest CakesAnbu Communications

Thoothukudi Business Directory