» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

கொரானாவால் களையிழந்த தூத்துக்குடி பனிமய மாதா ஆலயத் திருவிழா

செவ்வாய் 4, ஆகஸ்ட் 2020 7:38:43 PM (IST)
ஒவ்வொரு வருடமும் வெகுவிமரிசையாக கொண்டாடப்படும் தூத்துக்குடி பனிமய மாதா ஆலயத் திருவிழா கொரானா ஊரடங்கு காரணமாக எளிமையாக நடைபெறுகிறது.

தூத்துக்குடி மாநகருக்கே திருவிழா என்றால் அது ஆண்டுதோறும் ஜூலை 26ம் தேதியில் கொடியேற்றத்துடன் தொடங்கி ஆகஸ்ட் 5ம் தேதி வரை 10 நாட்கள் நடைபெறும் பனிமய மாதா ஆலயத் திருவிழா தான். இத்திருவிழாவில், கிறிஸ்தவ மக்கள் மட்டுமல்லாமல், வெளிநாட்டினர், இந்து, இஸ்லாமியர் உட்பட அனைவரும் சாதி, மத பேதமின்றி சமூக நல்லினக்கத்தோடு பங்குபெறுவது பனிமய மாதா ஆலயத்தின் தனிச்சிறப்பாகும்

ஒளிரும் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட பனிமய மாதா ஆலயத்தில் தினந்தோறும் ஆலயத்தில் நடைபெறும் திருப்பலிகள், ஆராதனைகள், சாலையெங்கும் மகிழ்ச்சி வெள்ளத்தில் நீந்தி செல்லும் மக்கள் கூட்டம் என திருவிழா நடைபெறும் 10 நாட்களும் கடைகள், பொருட்காட்சி, கலை நிகழ்ச்சி என ஆனந்தத்திற்கு குறைவே இல்லாமல் தினந்தோறும் பல்வேறு தரப்பு மக்களையும் ஆனந்தத்தில் ஆழ்த்தும் திருவிழாவாகும். 

400 ஆண்டுகளுக்கும் மேலாக தூத்துக்குடி மக்களுக்கு தனது அருளும் ஆசியும் வழங்கிவரும் தூய பனிமய மாதா திருவிழா இந்தாண்டு ஆலய வளாகத்திற்குள்ளேயே நடத்தப்பட்டு வருகிறது. ஆண்டுதோறும் ஆகஸ்ட 4ம் தேதி அன்னையின் திருவுருவ பவனியும், ஆகஸ்ட் 5ம் தேதி நகர வீதிகளிலும் அன்னை திருவுருவ பவனியும் நடைபெறும். இந்த ஆண்டு இந்த நிகழ்வுகள் இல்லை. இதற்கு காரணம் உலகையே அச்சுறுத்தும் கொடிய நோயான கொரானா தொற்றுதான். இதனால் அரசின் உத்தரவிற்கு ஏற்ப மக்கள் தங்களது இல்லங்களில் இருந்து கொண்டே உள்ளங்களில் பனிமய மாதாவை நினைத்து வேண்டிக் கொள்ளும் திருவிழாவாக மாறிவிட்டது. 


மக்கள் கருத்து

F.DennisonAug 6, 2020 - 11:28:06 AM | Posted IP 108.1*****

மரியே வாழ்க

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Black Forest Cakes


Anbu CommunicationsThoothukudi Business Directory