» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

சமூக வலைத்தளங்களில் உலாவரும் சதி : சகோ. மோகன்.சி.லாசரஸ் விளக்கம்

செவ்வாய் 4, ஆகஸ்ட் 2020 7:28:34 PM (IST)

சமூக வலைத்தளங்களில் உலாவரும் கருத்து திட்டமிட்டு பரப்பப்படும் சதி என சகோ. மோகன்.சி.லாசரஸ் விளக்கம் அளித்துள்ளார். 

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: கடந்த சில தினங்களாக வாட்ஸ் அப், முகநூலில் நாலுமாவடி இயேசு விடுவிக்கிறார் ஊழிய நிறுவனரான எனது உடல் நிலை குறித்து தவறான கருத்துக்கள் பரப்பப்பட்டு வந்தது. ரொம்ப சந்தோசம். நான் நல்ல சுகமாக இருக்கிறேன். ஆண்டவருடைய கிருபையிலே நானும் எனது மனைவியும் நல்லாதான் இருக்கிறோம். இப்பதான் ரெக்கார்டிங் முடித்துவிட்டு வந்திருக்கிறேன். 

அதனால் தான் உங்களிடம் பேசுகிறேன். கொஞ்சம் தொடர்ச்சியாக புரோகிராம், நிகழ்ச்சிகள் அதனால் கொஞ்சம் பலவீனம். அவ்வளவுதானே தவிர மற்றபடி ஒன்றுமில்லை. நல்லா ஆண்டவர் சுகமாக வைத்திருக்கிறார். உங்களுடைய அன்பு, ஜெபம் என்னை பெலப்படுத்துகிறது. ஊழியம் தடைபடாமல் நடந்து வருகிறது. என்மேல காண்பிக்கிற அன்பிற்காக, ஜெபத்திற்காக ரொம்ப நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். எனக்காக‌ ஜெபித்துக் கொள்ளுங்கள் என்றார்.


மக்கள் கருத்து

தமிழ்ச்செல்வன்Aug 10, 2020 - 06:19:27 PM | Posted IP 162.1*****

1 மூட்டை நெல் விதைச்சா, 1 மூட்ட அரிசிதான் கிடைக்கும். அதே மாதிரி 1000 ஓவா கொடுத்தா அதுக்கேத்த மாதிரிதான் இயேசு ஆசீர்வதிக்க முடியும். எவ்வளவு கொடுக்கிறியோ அதுக்கேத்த மாதிரிதான் இயேசு ஆசீர்வதிப்பாருன்னு சொன்னாரே. அதற்கு ஏதும் வௌக்கம் சொன்னாரா?

F.DennisonAug 6, 2020 - 11:36:17 AM | Posted IP 162.1*****

உங்கள் இதயம் துவளவேண்டாம்... உபாகமம் 20-3

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


Black Forest Cakes

Anbu CommunicationsThoothukudi Business Directory