» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

காமராஜ் கல்லூரி சார்பில் கொரோனா நிவாரணப் பொருள்கள் வழங்கும் விழா

செவ்வாய் 4, ஆகஸ்ட் 2020 6:47:01 PM (IST)



தூத்துக்குடி காமராஜ் கல்லூரி சார்பில் வறுமை கோட்டுக்கு கீழ் உள்ள மக்களுக்கு கொரோனா தடுப்பு கசாயம், அரிசி பை ஆகியவை வழங்கும் விழா நடந்தது.

வடதிசை இந்து நாடார்கள் தூத்துக்குடி மகமை தர்ம காரப்பேட்டை பரிபாலன சங்கம் மற்றும் தென்பாகம் காவல் நிலையம் இணைந்து சத்யாநகர், பாலம் பகுதியில் குடியிருந்து வரும் மக்களுக்கு வறுமை கோட்டுக்கு கீழ் உள்ள சுமார் 250 நபர்களுக்கு கொரானா தடுப்பு மூலிகை கசாயம் கபசுரகுடிநீர், முகக்கவசம் மற்றும் அரிசிபை ஆகியவை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.

நிகழ்ச்சியை தென்பாகம் காவல்நிலைய ஆய்வாளர் கிருஷ்ணகுமார், உதவி ஆய்வாளர் ராஜாமணி ஆகியோர் தொடங்கி வைத்தனர். காமராஜ் கல்லூரி செயலாளர் ராஜேந்திரன், பொருளாளர் முத்துசெல்வம், துணை செயலாளர் சோமு, கல்லூரி முதல்வர் நாகராஜன், கல்லூரி வழக்கறிஞர் கண்ணன் மற்றும் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads



Black Forest Cakes



Anbu Communications




Thoothukudi Business Directory