» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடி மாவட்டத்தில் கரோனா பாதிப்பு குறைந்து வருகிறது : ஆட்சியர் சந்தீப் நந்தூரி பேட்டி

செவ்வாய் 4, ஆகஸ்ட் 2020 12:31:10 PM (IST)தூத்துக்குடி மாவட்டத்தில் கோவிட் 19 பணிகள் சிறப்பாக நடைமுறை படுத்தப்பட்டு வருவதால் நோய் பாதிப்பு தற்போது குறைந்து வருகிறது என மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி தெரிவித்தார்.

தூத்துக்குடி மட்டக்கடை அய்யலு தெருவில் 16 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து அப்பகுதி தனிமைப்படுத்தப்பட்ட பகுதியாக அறிவித்துள்ளது. இப்பகுதியை இன்று காலை 10 மணியளவில் மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி நேரில் சென்று ஆய்வு செய்தார். பின்னர் இரண்டாம் கேட் மெயின் பகுதியில் காய்ச்சல் பரிசோதனை சிறப்பு முகாமையும், ராஜாஜி பூங்கா பகுதியில் காய்ச்சல் பரிசோதனை சிறப்பு முகாமையும், மேலும் பல்வேறு பகுதிகளையும் பார்வையிட்டார்.

பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: தூத்துக்குடி மருத்துவக் கல்லூரி மருத்துவமனை ஆய்வகத்திலும், நெல்லையில் உள்ள தனியார் ஆய்வகத்திலும் 24 மணி நேரத்தில் பரிசோதனை முடிவுகள் வெளியாகும் வகையில் ஏற்பாடுகள் நடந்து வருகிறது. முக்கியமாக நமது மாவட்டத்தில் அதிகமாக சோதனை எடுக்கப்பட்டுள்ளது. நேற்று வரை 80 ஆயிரம் சேம்பிள்கள் எடுக்கப்பட்டுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்தில் கோவிட் 19 பணிகள் சிறப்பாக நடைமுறை படுத்தப்பட்டுள்ளது. 

நோய் பரவலை தடுப்பதற்காக அதிகமான அளவில் மாதிரிகள் எடுக்கப்பட்டு வருகிறது. இதில் ஒரே நாளில் பரிசோதனை செய்து முடிவு வெளியிடுவதற்காக ஏற்பாடுகள் நடந்து வருகிறது. 2300 முதல் 2400 வரை மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டு வருகிறது. நோய் ஒரு ஏரியாவில் பரவி வரும் போது அங்கு சுகாதார பணியாளர்களை அனுப்புவதுடன், தேவைப்பட்டால் அந்த ஏரியாவை தனிமைப்படுத்தி அங்குள்ள அனைத்து மக்களுக்கு பரிசோதனை செய்து மற்றவர்களுக்கு நோய் பரவாமல் தடுப்பதற்கான தேவையான நடவடிக்கைகளை எடுத்து வருகிறோம். இதற்காக மாநில முதல்வரின் அறிவுரைப்படி பரிசோதனைகளை அதிகப்படுத்தி நோய் பரவலை கட்டுப்படுத்தி வருகிறோம். 

ஒருநாளைக்கு 3 ஆயிரம் பேருக்கு கரோனா பரிசோதனைகள் நடைபெற்று வருகிறது. இதனால் நோய் பாதிப்பு தற்போது குறைந்து வருகிறது. தூத்துக்குடி மாவட்டத்தில் 48 பகுதிகள் தனிமைப்படுத்தும் முகாமாக உள்ளது. மூன்று நாள்கள் முன்பு வரை 15 சதவீதமாக இருந்த கொரானா பாதிப்பு விகிதம் தற்போது 9.5 சதவீதமாக குறைந்துள்ளது. ஒரு நாளைக்கு 65 பரிசோதனை முகாம்கள் வரை நடைபெறுகிறது. 60 வயதிற்கு மேற்பட்டவர்கள் மற்றும் மற்ற நோய்கள் உள்ளவர்களை கண்டறிந்து அவர்களிடம் அறிகுறி ஏதும் இருப்பின் அவர்களை தனிமைப்படுத்தி உரிய சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்துள்ளோம். இதன்மூலம் இறப்பு விகிதத்தை குறைப்பதற்காக தேவையான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது" என ஆட்சியர் தெரிவித்தார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored AdsBlack Forest Cakes
Anbu CommunicationsThoothukudi Business Directory