» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

லாரி மோதி தனியார் நிறுவன ஊழியர் உயிரிழப்பு : டிரைவர் கைது

செவ்வாய் 4, ஆகஸ்ட் 2020 10:45:30 AM (IST)

தூத்துக்குடி அருகே சைக்கிள் மீது லாரி மோதிய விபத்தில் தனியார் நிறுவன ஊழியர் பரிதாபமாக உயிரிழந்தார். 

தூத்துக்குடி மாவட்டம், முடிவைத்தானேந்தல் யாதவர் தெருவைச் சேர்ந்தவர் சுப்பையா மகன் வேலு (53). தனியார் நிறுவனத்தில் வேலைபார்த்து வந்தார். இன்று காலை 6 மணியளவில் வேலைமுடிந்து சைக்கிளில் வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார். வாகைகுளம் சந்திப்பு அருகே வந்தபோது சாயர்புரத்தில் இருந்து வந்த டிப்பர் லாரி அவர் மீது மோதியது. 

இதில் பலத்த காயம் அடைந்த வேலு, சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து புதுக்கோட்டை போலீசார் வழக்குப்பதிந்து, லாரியை ஓட்டி வந்த வர்த்தக்கரெட்டி பட்டியைச் சேர்ந்த காளியாபிள்ளை மகன் விநாயகம் (54) என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads
Anbu CommunicationsBlack Forest CakesThoothukudi Business Directory