» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடியில் சாக்கு குடோனில் தீவிபத்து: ரூ.1½ லட்சம் சேதம்!

செவ்வாய் 4, ஆகஸ்ட் 2020 10:31:15 AM (IST)

தூத்துக்குடி ஸ்டேட் பாங்க் காலனியில் சாக்கு குடோனில் ஏற்பட்ட தீவிபத்தில் ரூ.1.5 லட்சம் மதிப்பிலான ஆயிரம் சாக்குகள் எரிந்து சேதமானது.

தூத்துக்குடி ஸ்டேட் பாங்க் காலனியைச் சேர்ந்தவர் காமாட்சி மகன் முத்துக்குமார் (55). இவர் அப்பகுதியில் சாக்கு குடோன் நடத்தி வருகிறார். இன்று அதிகாலை 2.30 மணியளவில் குடோனில் திடீர் தீவிபத்து ஏற்பட்டுள்ளது. இதி்ல் குடோனில் 20ஆயிரத்திற்கும் மேற்பட்ட சாக்குகள் எரிந்து சாம்பலானது. இதன் மதிப்பு சுமார் ரூ.1.5 லட்சம் ஆகும். 

இதுகுறித்து அக்கம்பக்கத்தினர் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர். தீயணைப்பு நிலைய அதிகாரி சங்கரன் தலைமையிலான தீயணைப்பு படையினர் ஒருமணி நேரம் போராடி தீயை அணைத்தனர்.  இதுகுறித்து பாதிக்கப்பட்ட முத்துக்குமார் கூறுகையில், எனக்கு தொழில் போட்டிகள் ஏராளமாக உள்ளது. இதன் காரணமாக யாரேனும் தீவைத்திருக்கலாம் என்பது குறித்து தூத்துக்குடி வடபாகம் போலீசில் புகார் கொடுத்துள்ளார். இந்த புகாரின் பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரைண நடத்தி வருகின்றனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


Black Forest Cakes

Anbu Communications







Thoothukudi Business Directory