» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தந்தை - மகன் கொலை வழக்கில் ஏட்டு முருகன் ஜாமீன் மனு விசாரணை தள்ளிவைப்பு

செவ்வாய் 4, ஆகஸ்ட் 2020 9:06:56 AM (IST)

சாத்தான்குளம் தந்தை - மகன் கொலை வழக்கில் ஏட்டு முருகன்  ஜாமீன் மனு மீதான விசாரணை தள்ளி வைக்கப்பட்டுள்ளது.

தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளத்தில் போலீசாரால் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்டு ஜெயராஜ் மற்றும் அவரது மகன் பென்னிக்ஸ் மரணமடைந்த விவகாரம் தொடர்டபாக கொலை வழக்காக பதிவு செய்யப்பட்டு சாத்தான்குளம் காவல் நிலைய காவலர்கள் அனைவரும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இதுகுறித்து சிபிஐ விசரணை நடந்து வருகிறது. 

இந்நிலையில், ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸ் கைது செய்யப்பட்டதற்கு காரணமான புகாரை அளித்த காவலர் முருகன், ஜாமீன் கேட்டு உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். அவர் தாக்கல் செய்துள்ள ஜாமீன் மனுவில், நான் வேறு வழக்கின் விசாரணை சம்பந்தமாக வெளியில் இருந்தபோது சுமார் இரவு 8.15 மணிக்கு என்னை காவல் நிலையத்திற்கு அவசரமாக அழைத்தார் இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர். அப்போது இன்ஸ்பெக்டர் ஸ்ரீதரும் சப் இன்ஸ்பெக்டர் பாலகிருஷ்ணனும் என்னிடம் ஜெயராஜ் மற்றும் பெண்ணிக்ஸ் மீது புகார் கொடுக்கும் படியும், அந்த புகாரில் கையொப்பம்  இடும்படியும் நிர்பந்தம் செய்தார்கள்.

மேலதிகாரிகளின் கட்டளைக்கு பணிந்து அந்த புகாரில் கையொப்பமிட்டதை தவிர, எந்த விதத்திலும் இந்த வழக்கில் நான் சம்பந்தப்படவில்லை. எனவே எனக்கு ஜாமீன் வழங்க வேண்டும் என மனுவில் கூறியுள்ளார். இந்த மனு மீதான விசாரணையை தேதி குறிப்பிடாமல் தள்ளி வைத்து நீதிபதி உத்தரவிட்டார். 


மக்கள் கருத்து

ஒருவன்Aug 4, 2020 - 06:27:38 PM | Posted IP 108.1*****

நீதிமன்றமே இனி 50 வருஷம் கழிச்சு ஜாமீன் கொடுங்க

M.sundaramAug 4, 2020 - 03:58:05 PM | Posted IP 173.2*****

The HC has to obey lawful command of his superior. The signing of unlawful document can not withstand before the law. He is at fault for doing so. So it is now established with admissible evidence that the alleged complaint against the deceased are fabricated with mala fide intention.

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads
Anbu CommunicationsBlack Forest CakesThoothukudi Business Directory