» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடி அனல்மின் நிலையத்தில் மின் உற்பத்தி குறைப்பு

செவ்வாய் 4, ஆகஸ்ட் 2020 8:54:00 AM (IST)

தமிழகத்தின் மின்தேவை குறைந்துள்ளதால் தூத்துக்குடி அனல் மின் நிலையத்தில் 2வது மற்றும் 4வது யூனிட்டில் மட்டுமே மின் உற்பத்தி நடைபெறுகிறது. 

இந்தியாவின் பழைமையான அனல்மின் நிலையங்களில் ஒன்றான தூத்துக்குடி அனல் மின் நிலையம் கடந்த 1979-ம் ஆண்டு முதல் செயல்பட்டு வருகிறது. இங்கு 5 யூனிட்டுகளில் தலா 210 மெகாவாட் வீதம் 1,050 மெகாவாட் மின்சார உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. இதில் உள்ள முதல் மூன்று யூனிட்டுகள் நிர்ணயிக்கப்பட்ட கால அளவைத் தாண்டியும் இயங்கி வருகிறது. இதனால், இவற்றில் அடிக்கடி பழுதுகள் ஏற்பட்டு மின் உற்பத்தி தடைபட்டு வருகிறது. 

இந்நிலையில் 31.11.2019 முதல் 5வது யூனிட்டில்  கொதிகலனில் ஏற்பட்ட  பழுதால்  210 மெகாவாட் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டது.  ஏற்கெனவே, தமிழகம் முழுவதும் பரவலாக மழை பெய்து வருவதால் மின்தேவை குறைந்துள்ளது. மேலும் 3வது யூனிட்டில் 31.07.2020 முதல் மின் உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் 2வது யூனிட்டில் 2வது யூனிட்டில் மின் உற்பத்தி நேற்று திடீரென நிறுத்தப்பட்டது. மின்தேவை குறைந்துள்ளதால் மின்வாரியத்தின் அறிவறுத்தலின் பேரில் மின் உற்பத்தி நிறுத்தப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads
Anbu Communications


Black Forest Cakes
Thoothukudi Business Directory