» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

காமராஜர் சிலையை இடமாற்றம் செய்ய கூடாது : பனங்காட்டு மக்கள் கழகம் வேண்டுகோள்

சனி 1, ஆகஸ்ட் 2020 7:49:19 PM (IST)

தூத்துக்குடி விஇ ரோட்டிலுள்ள காமராஜர் சிலையை இடமாற்றம் செய்யும் முயற்சியை நிறுத்த வேண்டுமென மாநகராட்சிக்கு பனங்காட்டு மக்கள் கழகம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

இது குறித்து பனங்காட்டு மக்கள் கழகம் தூத்துக்குடி வடக்கு மாவட்ட பொறுப்பாளர்  அற்புதராஜ் வெளியிட்ட செய்திகுறிப்பில், தூத்துக்குடி விஇ ரோட்டிலுள்ள முன்னாள் முதல்வர் காமராஜர் சிலையை மார்க்கெட் நுழைவு வாயிலில் தெற்கு மேற்புறத்தில் மாற்றி வைக்க வேண்டுமென தூத்துக்குடி மாநகராட்சி ஆணையர் கூறியுள்ளார். ஆணையர் இந்த செயல் காமராஜர் மீது பற்று கொண்ட லட்சகணக்கானோரின் மனதை புண்படுத்துவது போல் உள்ளது.

தமிழகத்திற்கு ஏராளமான நன்மைகளை செய்த அவரது சிலையை இடமாற்றம் செய்வது காமராஜர் புகழை இருட்டடிப்பு செய்யும் நோக்கம் இருக்குமோ என சந்தேகம் எழுகிறது. எனவே காமராஜர் சிலையை அகற்றும் முயற்சியை நிறுத்த வேண்டும். அகற்ற முயற்சித்தால் அறவழியில் போராடுவதை தவிர வேறு வழியில்லை. எனவே காமராஜர் சிலையை அகற்றும் முயற்சியை நிறுத்த வேண்டுமென மாநகராட்சியை கேட்டு கொள்கிறோம். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.


மக்கள் கருத்து

SritharanAug 2, 2020 - 04:11:32 PM | Posted IP 108.1*****

Don't mix caste in every thing and spoil city's development first....Tuty is worst in this case

TutyianAug 2, 2020 - 03:05:26 PM | Posted IP 162.1*****

Kamarajar iyya Indru irundhu Irundhaalum makkalukaaga thaan seyal Pattu thondu aatrirupaar thavira silai arasiyalai earkamaataar. Nalla thalaivargaluku Nalla eduthukaataaga iruka vendumae thavira suyanalam veandamaey. Vaalungal vaala vidungal.

முத்தையாAug 1, 2020 - 10:48:07 PM | Posted IP 162.1*****

ஆணையர் கூறுவதை செயல்படுத்த விடுங்கள். அப்போதுதான் நம் நகர் சிறப்பான நகராக மாறும். ஏற்கனவே அந்த பகுதியில் கடைகள் அதிகம் இருப்பதால் போக்குவரத்திற்கு மிகவும் நெருக்கடியாக உள்ளது.

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored AdsAnbu Communications

Black Forest CakesThoothukudi Business Directory