» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடி சிவன் கோவிலில் மகா சனிப்பிரதோஷ விழா : நந்தீஸ்வரருக்கு 1008 சங்காபிஷேகம்

சனி 1, ஆகஸ்ட் 2020 7:08:35 PM (IST)தூத்துக்குடி சிவன் கோவிலில் மகா சனிப்பிரதோஷ விழா நடைபெற்றது. இதில் கரோனா பாதிப்பு குறைய நந்தீஸ்வரருக்கு 1008 சங்காபிஷேகம் நடைபெற்றது.

தூத்துக்குடி நகரின் மையப்பகுதியில் பிரசித்தி பெற்ற பாகம்பிரியாள் உடனுறை சங்கர ராமேஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் இன்று மகா சனிப்பிரதோஷ விழா நடைபெற்றது. இதில் உலக அமைதிக்காக சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. மேலும் கரோனா வைரஸ் பாதிப்பு குறைய நந்தீஸ்வரருக்கு 1008 சங்காபிஷேகம் நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு பக்தர்களுக்கு அனுமதி இல்லாததால் சில பக்தர்கள் வாசலில் நின்றே சுவாமியை தரிசித்தனர்


இது குறித்து தகவல் கிடைத்ததும் அங்கு வந்த டவுன் டிஎஸ்பி.,கணேஷ், மற்றும் மத்தியபாகம் போலீசார், கரோனா வைரஸ் பரவல் காரணமாக பாெது ஊரடங்கு அமலில் உள்ளதால் அங்கு கூடியிருந்தவர்களை உடனே கலைந்து செல்லுமாறு மைக் மூலம் அறிவித்தனர். இதனால் அங்கிருந்தவர்கள் ஏமாற்றத்துடன் கிளம்பி சென்றனர்.  இதை தொடர்ந்து சிவன் கோவிலை சுற்றியுள்ள கேட்கள் அனைத்தையும் போலீசார் அடைத்தனர்.


மக்கள் கருத்து

K.ganeshanAug 2, 2020 - 09:10:30 PM | Posted IP 162.1*****

Let our God save all of us from carona.Thanks to Sivachariars of our sivan Kovil.

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads
Black Forest CakesAnbu Communications
Thoothukudi Business Directory