» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

ரயில் டிக்கெட் முன்பதிவு மையங்கள் ஞாயிற்றுக்கிழமை இயங்காது - தெற்கு ரயில்வே அறிவிப்பு

சனி 1, ஆகஸ்ட் 2020 5:25:28 PM (IST)

தூத்துக்குடி, நெல்லை உள்ளிட்ட பகுதிகளில் உள்ள ரயில்வே டிக்கெட் முன்பதிவு மையங்கள் ஞாயிற்றுக்கிழமைகளில் இயங்காது என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. 

இது தொடர்பாக தெற்கு ரயில்வே நிர்வாகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில், "ரயில்  பயண கட்டணத்தை திரும்ப பெறுவதற்காக மதுரை, திண்டுக்கல், திருநெல்வேலி, விருதுநகர், தூத்துக்குடி, கோவில்பட்டி, தென்காசி, புதுக்கோட்டை, காரைக்குடி, சிவகங்கை, ராமநாதபுரம், பழனி, ராஜபாளையம், திருச்செந்தூர் ஆகிய ரயில் நிலையங்களில்  பயணச் சீட்டு முன்பதிவு மையங்கள் செயல்பட்டு வருகின்றன. தமிழகத்தில் ஆகஸ்ட் மாதத்தில் வரவிருக்கிற அனைத்து ஞாயிற்றுக்கிழமைகளிலும் தளர்வற்ற முழு ஊரடங்கு அமல் படுத்தப் படுவதால், இந்த பயணச்சீட்டு முன்பதிவு மையங்கள் ஆகஸ்ட் 2, 9, 16, 23, 30 ஆகிய நாட்களில் இயங்காது"என தெரிவிக்கப்பட்டுள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Black Forest Cakes





Anbu Communications





Thoothukudi Business Directory