» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடியில் மரங்களை வெட்டி சாய்க்கும் மாநகராட்சி : பொதுமக்கள் கடும் எதிர்ப்பு

சனி 1, ஆகஸ்ட் 2020 4:55:06 PM (IST)



தூத்துக்குடியில் கழிவு நீர் கால்வாய் பணிகளுக்காக, சாலையோரத்தில் இருந்த மரங்களை வெட்ட பொதுமக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். 

தூத்துக்குடியில் மாநகராட்சி நிர்வாகம் மூலம் கழிவு நீர் கால்வாய் கட்டும் பணிகள் நடந்து வருகிறது. இதற்காக சாலையோரத்தில் இருந்த மரங்கள் வெட்டப்பட்டு வருகிறது. இந்நிலையில், தூத்துக்குடி தாமோதர நகர் பகுதியில் சாலையோரத்தில் இருந்த 3 மரங்கள் அடுத்தடுத்து வெட்டப்பட்டது. இதற்கு அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்து திரண்டனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.  இது குறித்து அப்பகுதியைச் சேர்ந்த அருண் விஜய் என்பவர் மாநகராட்சி தொலைபேசி மூலம் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என்று குற்றம்சாட்டினார். 

இதுகுறித்து அவர் கூறுகையில், சாலை பணிகள் உள்ளிட்டவைகளுக்காக மரங்களை வெட்டப்பட்டால், அந்த இடத்தில் புதிதாக மரக்கன்றுகள் நட வேண்டும் என உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஆனால் தூத்துக்குடியில் மாநகராட்சி நிர்வாகத்தினர் நீதிமன்ற உத்தரவை பின்பற்றாமல் மரங்களை வெட்டி வருகின்றனர். சாலையோர மரங்களை பாதுகாக்கும் வகையில் கழிவு நீர் கால்வாய் அமைக்க வேண்டும். இல்லையெனில் மாநகராட்சியை கண்டித்து பொதுமக்களை திரட்டி போராட்டம் நடத்தப்படும் என்றார்.  


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


Anbu Communications

Black Forest Cakes








Thoothukudi Business Directory