» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

திருநங்கைகளுக்கு பசுமை வீடுகள் கட்டும் பணிகள் : ஆட்சியர் சந்தீப் நந்தூரி ஆய்வு

சனி 1, ஆகஸ்ட் 2020 4:38:26 PM (IST)கோவில்பட்டி மந்திதோப்பு பகுதியில் 30 திருநங்கைகள் மற்றும் 10 மாற்றுத்திறனாளிகளுக்கு பசுமை வீடுகள் கட்டும் பணிகளை ஆட்சியர் சந்தீப் நந்தூரி, நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார்

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி ஒன்றியம் மந்திதோப்பு ஊராட்சி சந்தீப்நகர் பகுதியில் 30 திருநங்கைகள் மற்றும் 10 மாற்றுத்திறனாளிகளுக்கு தலா ரூ.2.10 லட்சம் மதிப்பில் பசுமை வீடுகள் கட்டும் பணிகள், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின்கீழ் 30 மாட்டு தொழுவம், மற்றம் சாலை, குடிநீர் வசதி என மொத்தம் ரூ.1.65 கோடி மதிப்பில் நடைபெறும் இறுதி கட்ட பணிகளை மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி, இன்று (01.08.2020) நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

பின்னர் மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி, தெரிவித்ததாவது: தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி ஒன்றியம் மந்தித்தோப்பு பகுதியில் திருநங்கைகளுக்கு வீட்டு வசதி மற்றும் அவர்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தும் வகையில் பால் பண்ணை அமைக்கும் ஒருங்கிணைந்த திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இப்பகுதியில் உள்ள 30 திருநங்கைகளுக்கு பசுமை வீடுகள் வழங்கும் திட்டத்தின் கீழ் ரூ.63 லட்சம் மதிப்பில் பசுமை வீடுகள், ரூ.34.50 லட்சம் மதிப்பில் மாட்டுதொழுவம், ரூ.22 லட்சம் மதிப்பில் தார்சாலை, ரூ.10 லட்சம் மதிப்பில் வடிகால் வசதி மற்றும் ரூ.15 லட்சம் மதிப்பில் மேல்நிலை நீர்தேக்க தொட்டியுடன் குடிநீர் வசதி ஆகியவற்றுக்கான பணிகள் நிறைவு பெறும் நிலையில் உள்ளது. மேலும் மாற்றுத்திறனாளிகள் 10 பேருக்கு ரூ.21 லட்சம் மதிப்பில் பசுமை வீடுகள் கட்டும் பணிகளும் நடைபெற்று வருகிறது.

ஒவ்வொரு திருநங்கைக்கும் மத்திய கூட்டுறவு வங்கி மூலம் மாடுகள் வாங்குவதற்கு கடன்கள் வழங்கப்பட்டுள்ளது. இவர்கள் 30 பேரும் சேர்ந்து ஒரு கூட்டுறவு சங்கம் உருவாக்கப்பட்டு ஆவின் நிறுவனத்துடன் இணைக்கப்பட்டு தினமும் இங்கு உற்பத்தி செய்யப்படும் சுமார் 800 லிட்டர் பால் ஆவின் நிறுவனத்திற்கு வழங்கப்படும். அதன் மூலம் இவர்களுக்கு வாரம் ஒருமுறை வருமானம் கிடைக்கும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. மேலும், அவர்களின் வருவாயினை அதிகரிக்கும் வகையில் மெயின் பஜாரில் கடைகள் அமைக்கப்பட்டு பால் பொருட்கள் உற்பத்தி செய்யப்பட்டு; விற்பனை செய்வதற்கும் திறன் மேம்பாட்டு பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகிறது. திருநங்கைகளுக்கு பசுமை வீடுகளுடன் அவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் ஒருங்கிணைந்த திட்டம் நிறைவடையும் நிலையில் உள்ளது. விரைவில் அமைச்சர் அவர்களின் தலைமையில் வீடுகள் மற்றும் பால்பண்ணை திறக்கும் நிகழ்ச்சி நடைபெறும் என தெரிவித்தார்.

நிகழ்ச்சியில் உதவி ஆட்சியர் (பயிற்சி) பிரித்திவிராஜ், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் தனபதி, கோவில்பட்டி வருவாய் கோட்டாட்சியர் விஜயா, கோவில்பட்டி வட்டாட்சியர் மணிகண்டன், கோவில்பட்டி ஒன்றியக்குழு தலைவர் கஸ்தூரி சுப்புராஜ், ஊரக வளர்ச்சி முகமை செயற்பொறியாளர் சங்கரஜோதி, உதவி செயற்பொறியாளர் ரெஜினால்டு, கோவில்பட்டி வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மாணிக்கவாசகம், வசந்தா, ஒன்றிய உதவி பொறியாளர் தமிழ்செல்வன், தமிழ்நாடு மின்சார வாரிய உதவி செயற்பொறியாளர் முனியசாமி, மந்தித்தோப்பு பஞ்சாயத்து தலைவர் முத்துலட்சுமி மற்றும் அலுவலர்கள் கலந்துகொண்டனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored AdsAnbu Communications

Black Forest CakesThoothukudi Business Directory