» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடியில் 30 மாற்றுத்திறனாளிகள் குடும்பத்திற்கு நல உதவிகள் : மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் வழங்கல்

சனி 1, ஆகஸ்ட் 2020 4:25:52 PM (IST)தூத்துக்குடியில் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி சங்க ஊழியர்கள் சார்பில் 30 மாற்றுத்திறனாளிகள் குடும்பத்திற்கு நல உதவிகள் வழங்கப்பட்டது. 

தூத்துக்குடி மாவட்டத்தில் கரோனா ஊரடங்கு காரணமாக வீட்டுக்குள்ளேயே முடங்கி வறுமை நிலையில் உள்ள முடுக்குக் காடு, எம்ஜிஆர் நகர், சிவந்தாகுளம், கூட்டாம்புளி, மட்டக்கடை ஆகிய பகுதியில் வசிக்கும் 30 மாற்றுத் திறனாளிகளின் குடும்பத்திற்கு தூத்துக்குடி மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி ஊழியர்கள் சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.

நிகழ்ச்சியில் கூட்டுறவு சங்கத் தலைவர் சுதாகர் தலைமையில், வங்கியின் ஊழியர்கள் நிர்வாகிகள் மற்றும் அலுவலர்களால் 10கிலோ அரிசி 30மூடையும், மற்றும் 1000 ரூபாய் மதிப்புள்ள 30 மளிகை பொருட்கள் வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் தமிழக மாற்றுத்திறனாளிகள் முன்னேற்ற நல்வாழ்வு சங்க தலைவர் மருதப்பெருமாள், செயலாளர் ஜெயராஜ், பொருளாளர் செல்வக்குமார் உட்பட பலர் கலந்து கொண்டனர். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored AdsAnbu Communications

Black Forest CakesThoothukudi Business Directory