» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

இரட்டை கொலை வழக்கில் தொடர்புடைய 2பேர் குண்டர் சட்டத்தில் கைது - எஸ்பி அதிரடி!!

சனி 1, ஆகஸ்ட் 2020 4:07:38 PM (IST)

ஏரல் அருகே இரட்டை கொலை வழக்கில் தொடர்புடைய 2 பேர் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளனர். 

இது தொடர்பாக தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் வெளியிட்ட செய்திக்குறிப்பு: கடந்த 02.07.2020 அன்று ஏரல் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட சிவகளையில் காதல் திருமணம் தொடர்பாக ஏற்பட்ட பிரச்சனையில் முத்துப்பேச்சி(42) மற்றும் அருண் மகேஷ் (26) ஆகியோரை அரிவாளால் வெட்டி கொலை செய்த வழக்கில் ஸ்ரீவைகுண்டம, பொட்டல் வடக்கு தெருவைச் சேர்ந்தவர்களான அருணாச்சலம் மகன் முத்துராமலிங்கம் (24), திருவேங்கடம்  என்ற அய்யாபிள்ளை மகன் அருணாச்சலம்(34) மற்றும் ஏரல் அம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த சுந்தரம் மகன் முத்துச்சுடர்(19) ஆகியோரை ஏரல் காவல் நிலைய போலீஸார் கைது செய்தனர்.

இதில், முத்துராமலிங்கம் மற்றும் அருணாச்சலம் ஆகிய  2 பேரையும் குண்டர் தடுப்புச்சட்டத்தின் கீழ் கைது செய்து நடவடிக்கை மேற்கொள்ள ஏரல் காவல் நிலைய ஆய்வாளர் பட்டாணி தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளருக்கு அறிக்கை சமர்ப்பித்தார். இது தொடர்பாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் பரிந்துரையின் பேரில் மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி அவர்கள் 2 பேரையும் குண்டர் தடுப்புச்சட்டத்தின் கீழ் கைது செய்ய உத்தரவிட்டார். இதையடுத்து முத்துராமலிங்கம் மற்றும் அருணாச்சலம் ஆகிய இருவரையும் ஏரல் காவல் நிலைய ஆய்வாளர் பட்டாணி குண்டர் தடுப்புச்சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையிலடைத்தார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


Black Forest Cakes


Anbu CommunicationsThoothukudi Business Directory