» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடியில் வீடு இல்லாமல் வீதியில் வசிக்கும் மக்கள் : மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுக்க கோரிக்கை!!

வெள்ளி 31, ஜூலை 2020 10:55:56 AM (IST)"தூத்துக்குடியில் பக்கிள் ஓடை அருகே வீடு இல்லாமல் வீதியில் வசிக்கும் மக்களுக்கு வீடு வழங்க மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுக்க வேண்டும்" என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

இது தொடர்பாக அப்பகுதி மக்கள் மாவட்ட ஆட்சியருக்கு அனுப்பியுள்ள மனு: தூத்துக்குடி தபால் தந்தி காலனி முதல் தெரு பக்கிள் ஓடையின் அருகே உள்ள காலியிடங்களில் குடிசை அமைத்து சுமார் 20 ஆண்டுகளுக்கு மேலாக குடியிருந்து வருகிறோம். இவ்விடத்தில் 20க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் பக்கிள் ஓடையின் அருகே நீர்வழிச்சாலை அமைப்பது தொடர்பாக அதிகாரிகள் முன்னிலையில் எங்களது வீடுகள், குடிசைகள் அனைத்தும் இடிக்கப்பட்டன. 

தற்போது குடியிருப்பதற்கு இடவசதியின்றி தவிப்பதோடு எங்களது வீட்டு உபயோகப் பொருட்கள் மற்றும் உடமைகள் அனைத்தும் வெட்ட வெளியில் கிடக்கிறது. கடந்த 27 ஆண்டுகளுக்கு முன்னர் எங்களுக்கு அரசு சார்பில் வழங்கப்பட்ட நில ஒதுக்கீடு போதிய பாதுகாப்பு இல்லாத நிலையில், சிலர் அதனை ஆக்கிரமித்துக் கொண்டனர். எனவே தற்போதைய சூழலில் குடியிருக்க இடவசதியின்றி தவித்து வரும் இப்பகுதியைச் சார்ந்த 20க்கும் மேற்பட்ட குடும்பத்தினருக்கு அரசு சார்பில் இடவசதி மற்றும் நில ஒதுக்கீடு செய்து உரிய முறையில் எங்களது வாழ்வாதரங்களை காக்க மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுக்க வேண்டும்". இவ்வாறு அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 
மக்கள் கருத்து

samuelAug 2, 2020 - 07:03:06 PM | Posted IP 162.1*****

FEEDING THE POOR EQUALS SERVING GOD. We Need the Spiritual Leader Like Pastors / Priests / Babaji etc from their belief to take care fo this poor. Treat your fellow brother the same as you treat yourself.

samuelAug 2, 2020 - 07:02:45 PM | Posted IP 162.1*****

FEEDING THE POOR EQUALS SERVING GOD. We Need the Spiritual Leader Like Pastors / Priests / Babaji etc from their belief to take care fo this poor. Treat your fellow brother the same as you treat yourself.

K.ganeshan . secretary, Thoothukudi makkal vazhvathara pathukappu sangam.Jul 31, 2020 - 09:26:57 PM | Posted IP 173.2*****

Request the collector to kindly consider these poor people request.

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored AdsAnbu Communications
Black Forest Cakes
Thoothukudi Business Directory