» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடியில் காமராஜர் சிலையை இடமாற்றம் செய்ய மாநகராட்சி உத்தரவு - தட்சிணமாற நாடார் சங்கம் எதிர்ப்பு

வியாழன் 30, ஜூலை 2020 4:35:29 PM (IST)தூத்துக்குடியில், விஇ ரோட்டில் உள்ள காமராஜர் சிலையை இடமாற்றம் செய்ய மாநகராட்சி நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. இதற்கு தட்சிணமாற நாடார் சங்கம் மற்றும் வியாபாரிகள் சங்கத்தி்னர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். 

தூத்துக்குடியில், விஇ ரோட்டில் அந்தோணியார் ஆலயம் அருகே வஉசி மார்க்கெட் முன்பாக கடந்த 30 ஆண்டுகளுக்கு முன்னர் தட்சிணமாற நாடார் சங்கம் சார்பில் 7 அடி உயரத்தில் பெருந்தலைவர் காமராஜரின் முழு உருவ வெண்கல சிலை நிறுவப்பட்டது. இந்த சிலைக்கும் காமராஜர் பிறந்தநாள், நினைவு நாளில் பல்வேறு அமைப்பினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தி வருகின்றனர். தற்போது ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் விஇ ரோடு புதுப்பிக்கப்பட்டு வருகிறது. இதையடுத்து காமராஜர் சிலையை இடமாற்றம் செய்ய மாநகராட்சி நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. 

இது தொடர்பாக தட்சிணமாற நாடார் சங்கம் மற்றும் வஉசி மார்க்கெட் வியாபாரிகள் சங்கத்திற்கும் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. அந்த அறிக்கையில், தூத்துக்குடி ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் விஇ சாலையை சீரமைக்க ஏதுவாகவும், பொதுமக்களுக்கும் இடையூறு ஏற்படதாக வகையில் காமராஜர் சிலையை மார்க்கெட்டின் நுழைவு வாயிலின் தெற்கு மேல்புறத்தில் மாற்றி சீர்மைப்படுத்திக் கொள்ள வேண்டும், அறிவிப்பு கிடைக்கப்பட்ட 7 நாட்களுக்குள் (ஆக.3ம் தேதிக்குள்) சிலையை இடமாற்றி விக்டோரியா தொடர்ச்சி சாலையை சீர்மிகு சாலையாக அமைக்க ஒத்துழைக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

ஆனால், காமராஜர் சிலையை இடமாற்றம் செய்ய தட்சிணமாற நாடார் சங்கம் மற்றும் வஉசி மார்க்கெட் வியாபாரிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இது தொடர்பாக போராட்டம் நடத்த உள்ளதாகவும், விரைவில் ஆலோசனைக் கூட்டம் நடத்தி முடிவெடுக்க உள்ளதாகவும் நிர்வாகிகள் தெரிவித்துள்ளனார். மேலும் காமராஜர் சிலையை இடமாற்றம் செய்ய எதிர்ப்பு தெரிவித்து வருகிற 3ம் தேதி சாகும் வரை உண்ணாவிரதம் இருக்கப்போவதாக சமத்துவ மக்கள் கழகம் மாவட்ட தலைவர் பிஎம் அற்புதராஜ் அறிவித்துள்ளார். காமராஜர் சிலையை அகற்ற எதிர்ப்பு கிளம்பியுள்ளதால் தூத்துக்குடியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 


மக்கள் கருத்து

பாலன்Jul 31, 2020 - 07:49:08 PM | Posted IP 162.1*****

காமராஜர் இருந்தால் கூட நகர சீரமைப்புக்கு மாற்ற சொல்லியீருப்பார்

indianJul 30, 2020 - 07:21:47 PM | Posted IP 162.1*****

What bout the church in this area?

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Anbu Communications


Black Forest Cakes
Thoothukudi Business Directory