» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடியில் கரோனாவால் மேலும் 2பேர் உயிரிழப்பு

வியாழன் 30, ஜூலை 2020 11:44:10 AM (IST)

தூத்துக்குடி அரசு மருத்துவமனை கரோனா வார்டில் சிகிச்சை பெற்று வந்த மேலும் 2பேர்  இன்று காலை உயிரிழந்தனர்.

தூத்துக்குடி மாவட்டத்தில் கரோனா தொற்று நாளுக்கு நாள் வேகமாக அதிகரித்து வருகிறது. நேற்று ஒரே நாளில் 5 பேர் பரிதாபமாக இறந்தனர்.  மேலும், மாவட்டத்தில் 316 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.  இதனால் மாவட்டத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 7ஆயிரத்தை நெருங்கி வருகிறது. 

மேலும் குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 4 ஆயிரத்து 124 ஆக உயர்ந்துள்ளது. 2 ஆயிரத்து 429 பேர் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் கரோனா வார்டில் சிகிச்சை பெற்றடு வந்த 2 ஆண்கள் இன்று காலை உயிரிழந்து விட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. . அவர்களது உடல்கள் அரசு அறிவித்துள்ள பாதுகாப்பு விதிகளின் படி அடக்கம் செய்யப்பட உள்ளது.  தூத்துக்குடி மாவட்டத்தில் இதுவரை 43பேர் கரோனாவால் உயிரிழந்துள்ளனர். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads





Anbu Communications

Black Forest Cakes





Thoothukudi Business Directory