» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

மொபட் மீது லாரி மோதியதில் கணவன் - மனைவி பலி ‍ : தூத்துக்குடி அருகே பரிதாபம்

வியாழன் 30, ஜூலை 2020 11:29:15 AM (IST)

தூத்துக்குடி அருகே மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதியதில் கணவன் - மனைவி பரிதாபமாக உயிரிழந்தனர்.

தூத்துக்குடி மாவட்டம், பசுவந்தனை அருகேயுள்ள பொம்மையாபுரத்தைச் சோ்ந்தவா் அந்தோணிசாமி (40). கூலித் தொழிலாளி. இவரது மனைவி ஜெயலட்சுமி (37). அந்தோணிச்சாமி, தனது மனைவியுடன் மோட்டாா் சைக்கிளில் எட்டயபுரம் அருகேயுள்ள இளம்புவனம் கிராமத்தில் நாட்டு மருந்து வாங்குவதற்கு சென்றாராம். மருந்து வாங்கிக் கொண்டு இருவரும் ஊருக்கு திரும்பி வந்து கொண்டிருந்தனா்.

தூத்துக்குடி - மதுரை பைாஸ் ரோட்டில் எட்டயபுரம் பல்க் அருகே வந்போது, திண்டுக்கல்லில் இருந்து தூத்துக்குடி நோக்கி வந்த லாரி, மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் ஜெயலட்சுமி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். படுகாயம் அடைந்த அந்தோணிசாமி, தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று இரவு இறந்தார். இதுகுறித்து எட்டயபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் கலா வழக்குப் பதிந்து சோ்ந்த லாரி ஓட்டுநா் வீரமணி என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


Anbu Communications


Black Forest CakesThoothukudi Business Directory