» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

முழு ஊரடங்கு அமைச்சருக்கு கிடையாதா பொதுமக்கள் கேள்வி?

திங்கள் 27, ஜூலை 2020 1:04:27 PM (IST)கரோனா வைரஸ் பரவல் காரணமாக ஞாயிற்றுகிழமைகளில் தளர்வற்ற பொதுமுடக்கம் அமல்படுத்துவது பொதுமக்களுக்கு மட்டும் தானா ? அமைச்சருக்கு கிடையாதா என பொதுமக்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

கரோனா வைரஸ் பரவல் காரணமாக தளர்வற்ற பொது முடக்கத்தால் நேற்று தமிழகம் முடங்கியது, பொதுமக்கள் வீடுகளில் முடங்கினர். சாலைகள் வெறிச்சோடின. மளிகை கடைகள், காய்கறி கடைகள், ஓட்டல்கள், பெட்ரோல் பங்குகள் மூடப்பட்டன. பொதுமுடக்கத்தை மீறியவர்கள்மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து வாகனங்களை பறிமுதல் செய்தனர். 

ஆனால் தளர்வில்லாத பொதுமுடக்க நாளான நேற்று தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் பசுவந்தனை அருகே சில்லாங்குளம் ஊராட்சி ஓம் சரவணாபுரத்தில் சமுதாய நலக்கூடம் அடிக்கல் நாட்டு விழா தமிழக செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ தலைமையில் விளாத்திகுளம் எம்எல்ஏ., சின்னப்பன், மற்றும் அரசியல் பிரமுகர்கள் நூற்றுக்கணக்கானவர்கள் பங்கேற்புடன் நடைபெற்றுள்ளது.

ஏற்கனவே தூத்துக்குடி மாவட்டத்தில் கரோனா பரவல் அதிகரித்து வருகிறது, தினமும் நூற்றுக்கணக்கில் கரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டு வரும் நிலையில் மக்கள் அவரச மருத்துவ காரணங்களுக்கு கூட வெளியே செல்ல முடியாத நிலையில் அமைச்சர் பங்கேற்ற இந்த விழா தேவைதானா என பொதுமக்கள் கேள்வி எழுப்பியுள்ளனர். விழாவை இன்று நடத்தியிருக்கலாம் என்றும்,மேலும் இது போன்ற நடவடிக்கைகளால் அரசின் கராேனா விழிப்புணர்வு நடவடிக்கைகள் கேள்விகுறியாவதாக வேதனை தெரிவித்தனர். 

இதுகுறித்து அரசுத்துறை அதிகாரி ஒருவரிடம் கேட்டபோது, இந்த விழா அரசு விழா கிடையாது. கிராமத்தில் அவர்கள் தனிப்பட்டமுறையில் ஏற்பாடு செய்துள்ளனர் என்றார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Black Forest Cakes

Anbu Communications

Thoothukudi Business Directory