» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

போதகர்களே அரசியலில் ஈடுபடாதீர்கள் : நேரலையில் மோகன் சி.லாசரஸ் கண்ணீர்!

ஞாயிறு 26, ஜூலை 2020 11:18:51 AM (IST)

நாசரேத் பேராலய 167 அடி உயர கோபுர உச்சியில் ஒரு குடும்பமே தற்கொலைக்கு முயன்ற விவகாரம் சபைகளுக்குள் நடக்கும்  அரசியலே காரணம் என்று சனிக்கிழமை இரவு நடைபெற்ற ஜெபிக்கலாம் வாங்க நேரலை நிகழ்ச்சியில் மோகன் சி.லாசரஸ் கண்ணீர் விட்டு பேசினார். 

தூத்துக்குடி மாவட்டம், குரும்பூர் அருகிலுள்ள நாலுமாவடி இயேசு விடுவிக்கிறார் ஊழிய தேவனுடையக் கூடாரத்தில் தற்போது நடைபெற்று வரும் கொரோனாகால ஊரடங்கினை முன்னிட்டு தற்போது இந்த ஊழியங்கள் சார்பில் சத்தியம் தொலைக்காட்சி, உள்ளூர் தொலைக்காட்சி சேனல்கள், இணைய தளங்கள், யூ டியூப் ஆகியவற்றில் நேரலையாக சனி, ஞாயிறு ஆகிய 2 நாள்கள் இரவு 7 மணி முதல் 9:30 மணி வரை ஒளிபரப்பாகிறது. 

அதே போல் நேற்று சனிக்கிழமை இரவு நடைபெற்ற நேரலையில் நாலுமாவடி இயேசு விடுவிக்கிறார் ஊழிய நிறுவனர் மோகன் சி.லாசரஸ் பேசியதாவது: உலகத்தில் கொரோனாவினால்  இந்தியாவில் மட்டும் 2.6 சதவீதம் பேர் இறந்துள்ளனர் என புள்ளி விவரங்கள் கூறுகிறது. இது உலகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு இறந்ததில் குறைவான நாடு என்ற இடத்தை இந்தியா என்பது குறிப்பிடத்தக்கது. 


மத்திய அரசை சிறப்பாக செயல்பட வைத்தார் இயேசு 

இது நாம் கண்ணீருடன் வேண்டிய பிரார்த்தனையாகும். இதில் இயேசு மத்திய அரசாங்கத்தை சிறப்பாக செயல்பட வைத்தார். இதற்காக சிறப்பாக செயல்பட்ட டாக்டர்கள், சுகாதாரத்துறை ஊழி யர்களின் பங்கு அளவிட முடியாதது ஆகும். சமீபத்தில் நாசரேத்தில் நடந்த சம்பவம் உலகம் முழுவதும் ஒரு பெரிய துக்கத்தை உண்டாக்கியது. நாசரேத் பேராலய கோபுரத்தில் ஏறி ஒரு குடும்பமே தற்கொலை செய்து கொள்ள போகிறோம் என்ற செய்தி அனைத்து தொலைக்காட்சி சேனல்களிலும், செய்திதாள்களிலும் வந்தது வேதனையான சம்பவமாக அமைந்தது. 

நாசரேத்தில் மர்காஷிஸ் என்ற மிஷனரி சுவிஷேசத்தை விதைத்து கோதுமை மணியாக நிலத்தில் விழுந்த அவரது கல்லறை இங்குதான் உள்ளது. அதுபோல அண்ணன் ஆர்.ஸ்டேன்லி போன்ற எண்ணற்ற ஊழியர்கள் நாசரேத்தில் இருந்து சென்று பல இடங்களில் ஊழியம் செய்து வருபவர்கள். நாசரேத் பேராலயம் தூத்துக்குடி- நாசரேத் திருமண்டலத்தைச் சேர்ந்தது.  நானும் இந்த திருமண்டலத்தை சேர்ந்தவன்தான். இந்த சம்பவத்தை சாதாரணமாக எடுத்துக் கொண்டேன். ஆனால் இதற்காக நான் தேவசமூகத்தில் ஜெபிக்க சென்ற போது இயேசு துக்கப்பட்டு அழுதார். நான் என்னைத் தானே ஒரு குற்றவாளியாக நினைத்து அதற்காக பாரப்பட்டு அழுதேன்.

இது குறித்து என்னிடம் ஒருசில புற ஜாதி மக்கள், சர்ச் கோபுரத்தை சூசைட் பாய்ண்டாக மாற்றி விட்டீர்களே என்று கேட்டது என்னை நிலைகுணிய செய்து விட்டது. நான் போதுமான அளவு என் சபைக்காக, திருமண்டலத்திற்காக  ஜெபிக்கவில்லையோ? என்ற கேள்வி எனக்குள் எழுந்தது. என்னைத்தானே ஒப்புக் கொடுத்தேன். இதற்கு காரணம் சபைக்குள்ளே அரசியல் நடப்பதுதான். 

போதகர்களே அரசியலில் ஈடுபடாதீர்கள்

சபைக்குள் பழிவாங்குதல் கூடாது. உங்களை இருகரம் கூப்பி கேட்கிறேன் போதகர்களே அரசியலில் ஈடுபடாதீர்கள். 2 குரூப்பை உருவாக்காதீர்கள். செயலாளர், பொருளாளர், சேகர கமிட்டி மெம்பர், சர்ச் கவுன்சில் மெம்பர், திருமண்டல பெருமன்ற மெம்பர் ஆகியோர் தேவனுடைய ராஜ்யம் கட்டப்படவே தேர்ந்தெடுக்கப்படுகிறீர்கள். இது ஊழியம்தான் தவிர பதவி கிடையாது. சபை தேர்தல் முறைகளில் ஆதி திருச்சபையை பின்பற்றலாம். தேர்தல் இல்லாமல் சீட்டு போட்டு தேர்ந்தெடுக்கலாம். இவ்வாறு அவர் பேசினார். 


மக்கள் கருத்து

கேட்ச்Jul 28, 2020 - 03:51:23 PM | Posted IP 162.1*****

No he is requesting to the christian community about internal politics in Diocesan its not related to politics.

NowsJul 28, 2020 - 10:32:16 AM | Posted IP 173.2*****

Pastors are judges to their Sabhaa in India

kumarJul 27, 2020 - 01:18:29 PM | Posted IP 108.1*****

amam ivanga mattumthan arasiyal pesanum..... pothuveliyil ippoluthu aalum maththiya arasangathai patri neengal pesinatheillaya??

indianJul 26, 2020 - 07:08:50 PM | Posted IP 162.1*****

But he talks about politics. He is canvasing votes against one party. Is it correct?

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


Anbu Communications

Black Forest Cakes
Thoothukudi Business Directory