» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடியில் தனியார் நிதி நிறுவனத்தில் பயங்கர தீ விபத்து : பல கோடி ரூபாய் தப்பியது

திங்கள் 20, ஜூலை 2020 10:41:32 AM (IST)தூத்துக்குடியில் தனியார் நிதி நிறுவனத்தில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. தீயணைப்பு வீரர்களின் துரித நடவடிக்கையால் பல கோடி ரூபாய் தப்பியது. 

தூத்துக்குடி 4ஆம் ரயில்வே கேட் அருகே, குறிஞ்சி நகர் மெயின் ரோட்டில் ஸ்ரீராம் பைனான்ஸ் நிதி நிறுவனம் இயங்கி வருகிறது. இங்கு நேற்றிரவு சுமார் 11 மணி அளவில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இதில் அங்குள்ள கம்ப்யூட்டர்கள், நிதி சம்பந்தமான ஆவணங்கள் எரிந்து நாசமானதாக தெரிகிறது. இது குறித்து தகவல் அறிந்ததும் தூத்துக்குடி தீயணைப்பு நிலைய அலுவலர் சங்கரன் தலைமையில் ஒரு தீயணைப்பு வாகனமும், சிப்காட் தீயணைப்பு நிலைய அலுவலர் முனியசாமி தலைமையில் மற்றொரு வாகனமும் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தன.

சுமார் 4மணி நேரம் போராடி தீயணைப்பு வீரர்கள் தீயை அணைத்தனர். மேலும் மாவட்ட தீயணைப்பு அலுவலர் ஜெகதீசன், உதவி அலுவலர் குமரேசன், தீயணைப்பு போக்குவரத்து அலுவலர்கள் ரோசன், அருணாசலம் ஆகியோர் தீயணைப்பு பணியில் துரிதமாக செயல்பட்டனர்.  இந்த தீவிபத்தில் சுமார் ரூ.2லட்சம் மதிப்புள்ள பொருட்கள் சேதம் அடைந்துள்ளன.  இந்த அலுவலகத்தின் கீழ்புறத்தில் ஆந்திரா வங்கி மற்றும் தனியார் வங்கிகள் இயங்கி வருகின்றன. தீயணைப்பு வீரர்கள் துரிதமாக செயல்பட்டதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டு பல கோடி ரூபாய் தப்பியது. இந்த சம்பவத்தால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. 


இதனிடையே தீயணைப்பு பணியில் ஈடுபட்டிருந்த முன்னணி தீயணைப்பு வீரர் தங்கராஜ் மகன் கார்த்திகேயன் (53) என்பவர் தீயை அணைக்கும் பணியின் போது எதிர்பாராதவிதமாக தவறி விழுந்து லேசான காயம் அடைந்தார்.  இதையடுத்து அவர் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


Anbu CommunicationsBlack Forest Cakes


Thoothukudi Business Directory