» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடி உட்பட 9 ரயில் நிலையங்களில் நாளை முதல் பயணச்சீட்டு கட்டணம் திரும்ப பெறலாம்

ஞாயிறு 19, ஜூலை 2020 6:05:50 PM (IST)

ரயில் பயணச்சீட்டு கட்டணத்தை திரும்ப அளிப்பதற்காக தூத்துக்குடி உட்பட 9 ரயில் நிலையங்கள் நாளை முதல் திறந்திருக்கும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

இதுகுறித்து தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்திகுறிப்பு: மதுரை ரயில்வே கோட்டத்தில் பயணச்சீட்டு கட்டணத்தை திரும்ப அளிப்பதற்காக மதுரை, திண்டுக்கல், விருதுநகர், திருநெல்வேலி ஆகிய ரயில் நிலையங்களில் முன்பதிவு மையங்கள் இயங்கிவருகின்றன. மற்ற மாவட்ட தலைநகரங்கள் மற்றும் முக்கிய நகரங்களில் உள்ள ரயில் நிலையங்களில் பயணச்சீட்டு கட்டணத்தை திரும்ப அளிப்பதற்கான ஏற்பாடுகள் தற்போது செய்யப்பட்டுள்ளன. 

அதன்படி நாளை (20.7.2020) முதல் தூத்துக்குடி, கோவில்பட்டி, தென்காசி, புனலூர், ராமநாதபுரம், சிவகங்கை, காரைக்குடி, புதுக்கோட்டை ஆகிய ரயில் நிலையங்களில் பயணச் சீட்டு முன்பதிவு மையங்கள் செயல்பட இருக்கின்றன. இந்த முன்பதிவு மையங்கள் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மதியம் 2 மணி முதல் 2 30 மணி வரை உணவு இடைவேளையோடு செயல்பட இருக்கிறது. எனவே பொதுமக்கள் கொரோனா பொது முடக்கத்தில் ரத்து செய்யப்பட்ட ரயில்களுக்கான பயணச்சீட்டுகளை ரத்துசெய்து முழு கட்டணத்தையும் திரும்பப் பெற்றுக்கொள்ளலாம். ஞாயிற்றுக்கிழமை ஊரடங்கு இருப்பதால் முன்பதிவு மையங்கள் செயல்படாது. ரத்து செய்ய வருபவர்கள் கரோனா தடுப்பு முன்னெச்செரிக்கையாக மாஸ்க், சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored AdsAnbu Communications

Black Forest CakesThoothukudi Business Directory