» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

கொலை வழக்கு ‌போலீசாருக்கு வாட்ஸ் அப்பில் ஆதரவு : பிரண்ட்ஸ் ஆஃப் போலீஸ் வீடு சூறை - 20பேர் மீது வழக்கு

ஞாயிறு 19, ஜூலை 2020 10:10:52 AM (IST)சாத்தான்குளம் வியாபாரிகள் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட போலீசாருக்கு ஆதரவாக வாட்ஸ் அப்பில் பதிவிட்ட போலீஸ் நண்பர்கள்குழு உறுப்பினர் வீட்டில் பொருள்களை அடித்து நொறுக்கி, 3பைக் மற்றும் கார் உடைத்து சேதப்படுத்தப்பட்டதாக 20 பேர் மீது போலீசார் வழக்குபதிவு செய்துள்ளனர்.

தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் முஸ்லீம் தெருவைச் சேர்ந்தவர் எபிரேயர் பெஞ்சமின் மகன் சாம்சன் (22). இவர் சாத்தான்குளம் காவல் நிலையத்தில் போலீஸ் நண்பர்கள் குழு உறுப்பினராக பணி புரிந்து வந்தார். இதற்கிடையே சாத்தான்குளம் காவல் நிலையத்துக்கு விசாரணைக்கு போலீசார் அழைத்து சென்று வியாபாரிகளான ஜெயராஜ், பென்னிக்ஸ் ஆகியோரை தாக்கியதில் சிறையில் உயிரிழந்தனர். இந்த வழக்கில் சிபிசிஐடி, சிபிஐ போலீசார் விசாரணை நடத்தியதில் இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர் உள்ளிட்ட 10பேர் கைது செய்யப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த பிரச்னை தொடர்பாக சாம்சன், வாட்ஸ் அப்பில் கைது செய்யப்பட்ட போலீசார்ருக்கு பதிவு செய்ததாக கூறப்படுகிறது. 

இதுதொடர்பாக அவருக்கும் மேல சாத்தான்குளம் சக்திவேல் மகன் சிவா என்பவருக்கும் பிரச்னை ஏற்பட்டது. இதையடுத்து கடந்த 15ஆம் தேதி இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதில் ஆத்திரமடைந்த சிவா, அவரது நண்பர்கள் அபிஷேக், தினேஷ், நவீன், வினோத், மனோஜ், அருண், பிரவீன் உள்ளிட்ட 20 பேர்கள் சாம்சன் வீட்டுக்கு சென்று தகராறில் ஈடுப்பட்டு அவரை வீடு மற்றும் பொருள்கள் மற்றும் வீட்டு முன் நிறுத்தியிருந்த 3பைக் , ஒரு காரை அடித்து சேதப்படுத்தியதாகவும், இதை தட்டிக்கேட்ட சாம்சனுக்கு கொலை மிரட்டல் விடுத்ததாகவும் கூறப்படுகிறது. இதுகுறித்து சாம்சன் சாத்தான்குளம் காவல் நிலையத்தில் அளித்துள்ள புகாரின் பேரில் காவல் ஆய்வாளர் பெர்னாட் சேவியர் விசாரணை நடத்தி சிவா உள்ளிட்ட 20 பேர்கள் மீது வழக்குபதிந்து தேடி வருகிறார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored AdsBlack Forest Cakes
Anbu Communications
Thoothukudi Business Directory