» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

மாற்றுத்திறனாளிகளுக்கு கரோனா நிவாரண தொகை வழங்கல்

வியாழன் 16, ஜூலை 2020 8:42:47 PM (IST)


தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகே உள்ள அடைக்கலாபுரம் புனித சூசை அறநிலையத்தில் மாற்று திறனாளிகளுக்கு கரோனா நிவாரண தொகையை மாவட்ட மாற்று திறனாளிகள் நல அலுவலர் வழங்கினார்.

தமிழகத்தில் கரோனா வைரஸ் பரவலை தொடர்ந்து மாநிலம் முழுவதும் ஊரடங்கு அமலில் உள்ளது. இதில் பல்வேறு தரப்பினருக்கு தமிழக அரசு உதவி தொகை வழங்கி வருகிறது. தூத்துக்குடி மாவட்ட மாற்றுதிறனாளிகளுக்கு ரூ.3.62 கோடியை நிவாரண தொகையாக அரசு ஒதுக்கீடு செய்துள்ளது. தூத்துக்குடி மாவட்டத்தில் தாலுகா வாரியாக சமூக பாதுகாப்பு திட்டம் மூலம் மாற்றுதிறனாளிகளுக்கு இந்த நிதி வழங்கப்பட்டு வருகிறது.

இதுவரை 18 ஆயிரம் பேர்களுக்கு நிவாரணம் வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் திருச்செந்தூர் அருகே உள்ள அடைக்கலாபுரம் புனித சூசை அறநிலையத்தில் உள்ள மாற்றுதிறனாளிகள் 71 பேர்களுக்கு தலா ரூ.1000 வழங்கப்பட்டது. மாவட்ட மாற்று திறனாளிகள் நல அலுவலர் பிரம்மநாயகம் நிவாரண தொகையை வழங்கினார். இந்நிகழ்ச்சியில் சமூக பாதுகாப்பு திட்ட தாசில்தார் முருகேசன், வி.ஏ.ஒ., செல்வலிங்கம், புனித சூசை அறநிலைய இயக்குனர் பங்குதந்தை ஜோசப் இஸிதோர், உதவி பங்குதந்தை சேவியர் ஆகியோர் கலந்து கொண்டனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored AdsBlack Forest Cakes
Anbu Communications
Thoothukudi Business Directory