» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

கந்த சஷ்டி கவசம் பாடி யூட்யூப் சேனலுக்கு எதிர்ப்பு : முருகர் வேடமணிந்து வலம் வந்த குழந்தைகள்

வியாழன் 16, ஜூலை 2020 8:28:52 PM (IST)


கந்த சஷ்டி கவசம் குறித்து சர்ச்சை எழுந்த நிலையில் கறுப்பர் கூட்டம் யூ ட்யூப் சேனலுக்கு எதிராக திருச்செந்தூரில் வீட்டு வாசலில் முருகர் படம் வைத்து விளக்கேற்றி வணங்கி கந்த சஷ்டி கவசம் பாடி பொதுமக்கள் எதிர்ப்பை பதிவு செய்தனர்.

சில தினங்களுக்கு முன் கந்த சஷ்டி கவசம் குறித்து கறுப்பர் கூட்டம் என்ற யூ ட்யூப் சேனலில் விமர்சித்து கருத்து வெளியிடப்பட்டு இருந்தது. இதற்கு தமிழகத்தில் பா.ஜ.க., இந்து அமைப்புகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து கண்டனத்தை பதிவு செய்தனர். கொரோனா ஊரடங்கு முடக்கத்தால் கோயில்களில் பக்தர்கள் தரிசனத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதால் வீடுகளிலிருந்து முருகனை வழிபட்டனர்.

இந்நிலையில் திருச்செந்தூரில்  ஆடி மாதம் முதல் கார்த்திகை நாளான இன்று வீடுகளின் முன்பு முருகர் படம் வைத்து விளக்கேற்றி வணங்கியதோடு கந்த சஷ்டி கவசம் பாடினர். மேலும் முருகர் வேடமணிந்து குழந்தைகள் வந்தனர். திருச்செந்தூர்  புளியடிதெரு, வ.உ.சி. தெரு, வீரராகவபுரம், தெற்குரதவீதி  ஆகிய பகுதிகளில் பா.ஜ.க.வினர் மற்றும் பொதுமக்கள் எதிர்ப்பை தெரிவித்து கோஷமிட்டனர்.இந்நிகழ்ச்சியில் பா.ஜ.க., மாநில மகளிரணி பொதுசெயலாளர் நெல்லையம்மாள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.   


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


Black Forest Cakes

Anbu Communications
Thoothukudi Business Directory