» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

ஸ்ரீவைகுண்டம் புனித சந்தியாகப்பர் ஆலய திருவிழா : கொடியேற்றத்துடன் தொடங்கியது

வியாழன் 16, ஜூலை 2020 8:08:39 PM (IST)

ஸ்ரீவைகுண்டத்தில் குருசுகோயில் என்றழைக்கப்படும் புனித சந்தியாகப்பர் திருத்தல திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.

இயேசு கிறிஸ்துவின் 12 சீடர்களில் ஒருவரான புனிதசந்தியாகப்பருக்கு 1938 ம் ஆண்டு ஸ்ரீவைகுண்டம் தாமிரபரணி நதிக்கரையில் ஆலயம் எழுப்பப்பட்டது. ஆலயம் கட்டப்பட்டு 82 ஆண்டுகளாக ஆலயத் திருவிழா ஆண்டுதோறும் கொண்டாடப்படுகிறது. இந்நிலையில், இந்த ஆண்டு உலக நாடுகளை அச்சுறுத்தும் விதமாக கரோனா தொற்று நோயால் மக்கள் பாதிக்கப்பட்டு வருவதாலும் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளதாலும் மக்களுக்காக மக்கள் இல்லாமல் திருவிழா கொண்டாட முடிவெடுக்கப்பட்டது. இதன்படி, இந்த ஆண்டிற்கான திருவிழாவை முன்னிட்டு  இன்று (16ம்தேதி) ஸ்ரீவைகுண்டம் குருசுகோயில் ஆலயத்தில் திருப்பலி நடைபெற்றது.

இதனைதொடர்ந்து ஆலயம் முன்பு உள்ள கொடி மரத்தில் மாலை 6.30 மணிக்கு சிறப்பு கொடிகளை மந்திரித்து ஸ்ரீவைகுண்டம் குருசு கோயில் ஆலய பங்குதந்தை கிஷோக், அருட்தந்தை பெஞ்சமின் டிசூசா ஆகியோர் கொடியேற்றி வைத்தனர். இரவு 7 மணிக்கு சிறப்பு ஆராதனை திருப்பலி நடைபெற்றது. ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளதால் இந்த ஆண்டிற்கான திருவிழாவில் பக்தர்கள் கலந்துகொள்ள அனுமதியில்லை என அறிவிக்கப்பட்டு இருந்ததால் பல்லாயிரக்கணக்கான மக்கள் கலந்து கொள்ளும் குருசுக்கோயில் திருவிழா கொடியேற்றம் குறைவான பக்தர்களின் பங்களிப்புடன் நடைபெற்றது. திருவிழா நாட்களில் தினமும் காலை 5.30 மணிக்கு திருப்பலியும், மாலை 6.30 மணிக்கு நற்கருணை ஆராதனையும் நடைபெறுகிறது.

ஆலயத்தின் முக்கியத் திருவிழாவான 10ம் திருவிழா வரும் ஜூலை 25ம்தேதி ஆலயத்திருத்தேர் திருவிழா நிகழ்ச்சி ரத்து செய்யபட்டுள்ளது. வருகிற ஜூலை 26 ம்தேதி காலை கொடியிறக்க நிகழ்ச்சியுடன் விழா நிறைவடைகிறது.கொடியேற்ற நிகழ்ச்சியில் குருசுகோவில் பொதுமக்கள் அவர்கள் வீடு, மாடிகளில் மற்றும் வீதிகளில் கோவில் முன்பு நின்று கொடியேற்றம் மற்றும் அதன் பின்னர் நடந்த சிறப்பு ஆராதனை நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர். லயத்துக்குள் யாரும் அனுமதிக்கப்படவில்லை அனைவரும் மாஸ்க் அணிந்து கலந்துகொண்டனர். பாதுகாப்பு ஏற்பாடுகளை ஸ்ரீவைகுண்டம் போலீஸார் செய்திருந்தனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Black Forest CakesAnbu CommunicationsThoothukudi Business Directory