» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

சாத்தான்குளம் சிறுமி கொலை: தேசிய குழந்தைகள் நல ஆணையம் வழக்குப்பதிவு

வியாழன் 16, ஜூலை 2020 7:29:59 PM (IST)

சாத்தான்குளத்தில் 7 வயது சிறுமி கொலை செய்யப்பட்டு உடல் பிளாஸ்டிக் தொட்டிக்குள் திணிக்கப்பட்டு மீட்கப்பட்ட வழக்கில் தேசிய குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணையம் தாமாக முன் வந்து வழக்குப்பதிவு செய்துள்ளது.

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகேயுள்ள கல்விளை இந்திரா நகர் பகுதியைச் சேர்ந்த 7 வயது சிறுமி நேற்று காலை கடைக்கு செல்வதாக வீட்டில் கூறிவிட்டு சென்றுள்ளார். ஆனால், வெகுநேரமாகியும் திரும்பி வராததால் குடும்பத்தினர் தேடியுள்ளனர்.

இந்நிலையில் கல்விளையில் இருந்து வடலிவிளை செல்லும் சாலையில் இசக்கியம்மன் கோயில் அருகே உள்ள கால்வாய் பாலத்துக்கு அடியில் தண்ணீர் தொட்டி ஒன்றில் சிறுமி உடல் கிடந்துள்ளது.

இதுகுறித்த தகவலின்பேரில் சாத்தான்குளம் போலீஸார் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து பேட்டி அளித்த மாவட்ட எஸ்பி ஜெயக்குமார், கொலை தொடர்பாக 2 இளைஞர்களை கைது செய்துள்ளோம். பாலியல் வன்கொடுமை இல்லை என்று அவர்கள் தெரிவித்துள்ளனர். ஆனால் பிரேத பரிசோதனை அறிக்கை வந்தப்பின்னரே அதுகுறித்து முடிவு செய்வோம் என்று தெரிவித்தார்.

இதுகுறித்து தேசிய குழந்தைகள் நல ஆணையம் வழக்கை கையில் எடுத்துள்ளது. இதுகுறித்து அதன் குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணைய உறுப்பினர் மருத்துவர் ஆனந்த் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது,சாத்தான்குளத்தில் காணாமல் போன சிறுமி சடலமாக மீட்கப்பட்டுள்ள சம்பவத்தை தொடர்ந்து 8 வது முறையாக தேசிய குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணையம் தாமாக முன்வந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

அதில் இதுவரை 3 வழக்குகளில் பாதிக்கப்பட்டோருக்கு உரிய நிவாரணம் வழங்கப்பட்டுள்ளது.தூத்துக்குடி மாவட்ட எஸ்பி., ஜெயக்குமாரிடம் வழக்கு தொடர்பான முதற்கட்ட தகவல்களை கேட்டறிந்துள்ளோம். வெகு விரைவில் குழந்தைகள் பாதுகாப்பு நடவடிக்கைகளில் பல மாற்றங்களை எதிர்பார்க்கலாம்.இவ்வாறு ஆணைய உறுப்பினர் ஆனந்த் தெரிவித்துள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


Black Forest Cakes

Anbu Communications
Thoothukudi Business Directory