» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடியில் ஒரே நாளில் 170 பேருக்கு கரோனா பாதிப்பு : 32 பேர் டிஸ்சார்ஜ்

வியாழன் 16, ஜூலை 2020 7:13:37 PM (IST)

தூத்துக்குடி அரசு மருத்துவமனை கரோனா வார்டில் புதிதாக தொற்று உறுதி செய்யப்பட்டு 170 பேர் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 32 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர்.

தூத்துக்குடியில் தற்போது கரோனா வைரஸ் தொற்றால் அதிகம் பேர் பாதிக்கப்பட்டு வருகின்றனர். வெளியூர் மற்றும் வெளி மாநிலங்களிலிருந்து வந்தவர்கள்., உள்ளூரிலேயே சமூக இடைவெளியை கடைபிடிக்காதவர்களால் கரோனா தொற்று அதிகம் பரவுவதாக தெரிய வந்துள்ளது. ஒரு புறம் கரோனா பாதிப்பு இருந்தாலும் மறுபுறம் கரோனா பாதிப்பிலிருந்து குணமடைந்தவர்கள் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது.

தூத்துக்குடி அரசு மருத்துவமனை கரோனா வார்டில் 170 பேர் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இரவு 7 மணி நிலவரப்படி கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு அரசு மருத்துவமனையில் 337 பேர் பேர் சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்று  கரோனா நோய்த் தொற்றின் காரணமாக ஒருவர் மட்டும் இறந்து விட்டார். தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் கரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 3 ஆயிரத்தை கடந்தது என்பது குறிப்பிடத்தக்கது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored AdsBlack Forest Cakes


Anbu Communications


Thoothukudi Business Directory