» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தந்தை, மகன் கொலை வழக்கில் 5போலீசாரின் காவல் ஜூலை 30ம் தேதி வரை நீட்டிப்பு

வியாழன் 16, ஜூலை 2020 5:43:04 PM (IST)

சாத்தான்குளம் தந்தை மகன் கொலை வழக்கில் கைதான 5போலீசாருக்கு  30ஆம் தேதி வரை காவலை நீடித்து மதுரை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கில் இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர் உள்ளிட்ட 10 போலீசார் கைது செய்யப்பட்ட நிலையில், இந்த வழக்கு சிபிஐ வசம் ஒப்படைக்கப்பட்டது. கைது செய்யப்பட்டவர்களில் இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர், சப்-இன்ஸ்பெக்டர்கள் ரகு கணேஷ், பாலகிருஷ்ணன், காவலர்கள் முத்துராஜ், முருகன் ஆகிய 5 பேர் சிபிஐ காவலுக்கு அனுப்பப்பட்டனர்.  கோர்ட்டு உத்தரவையடுத்து போலீசார் 5 பேரும், சி.பி.ஐ. கூடுதல் கண்காணிப்பாளர் விஜயகுமார் சுக்லா தலைமையிலான சி.பி.ஐ. அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டனர். 

பின்னர் 5 பேரையும் சி.பி.ஐ. அதிகாரிகள் மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்று, அங்கு 5 பேருக்கும் கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதை தொடர்ந்து அவர்கள் 5 பேரையும் மருத்துவமனையில் இருந்து மதுரை ஆத்திகுளம் மெயின்ரோட்டில் உள்ள சி.பி.ஐ. அலுவலகத்திற்கு அழைத்து சென்றனர். அங்கு அவர்களிடம் சி.பி.ஐ. அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தினார்கள். 3 நாட்களாக அவர்களிடம் தனித்தனியாக விசாரணை நடத்தப்பட்டது. விசாரணைக்குப் பிறகு அவர்களிடம்  தனித்தனியாக வாக்குமூலம் பெறப்பட்டது. 

இதையடுத்து இன்று மாலை அவர்கள் 5பேரும் மதுரை மாவட்ட தலைமை நீதித்துறை நடுவர் ஹேமானந்தகுமார் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டனர். நீதிபதி அவர்கள் 5பேரையும் ஜூலை 30ம் தேதி வரை நீதிமன்ற காவலுக்கு அனுப்ப உத்தரவிட்டார். இதையடுத்து இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர், சப்-இன்ஸ்பெக்டர்கள் ரகு கணேஷ், பாலகிருஷ்ணன், காவலர்கள் முத்துராஜ், முருகன் ஆகிய 5பேரையும் போலீசார் சிறையில் அடைத்தனர்.  


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


Black Forest Cakes

Anbu Communications








Thoothukudi Business Directory