» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

மகளை பாலியல் வன்கொடுமை செய்து கர்ப்பமாக்கிய தந்தை மீது போக்ஸோ சட்டத்தில் வழக்குப் பதிவு!!

வியாழன் 16, ஜூலை 2020 5:18:34 PM (IST)

விளாத்திகுளம் அருகே 14 வயது மகளை பாலியல் வன்கொடுமை செய்து கர்ப்பமாக்கிய தந்தை மீது போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. 

தூத்துக்குடி மாவட்டம், விளாத்திகுளம் அருகே உள்ள புதூர் சென்னம்பட்டியை சேர்ந்தவர் கருப்பசாமி (45). இவருக்கு 2 மனைவிகள், இருவரும் சகோதரிகள். இவர்கள் இருவருக்கும் ஆளுக்கொரு மகள் உள்ளனர். கருப்பசாமி தற்போது புதூரில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். இந்நிலையில், 2வது மனைவியின் 14 வயது மகளுக்கு சில தினங்களுக்கு முன் திடீரென வயிற்று வலி ஏற்பட்டதாக தெரிகிறது. இதனைத் தொடர்ந்து புதூர் அரசு மருத்துமனையில் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு, மேல் சிகிச்சைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அங்கு மருத்துவர்கள் பரிசோதனை செய்தபோது சிறுமி ஆறு மாத கர்ப்பமாக இருப்பது தெரியவந்துள்ளது. இதையடுத்து சிறுமியின் தாய் விளாத்திகுளம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் செய்தார். போலீசார் சிறுமியிடம் நடத்திய விசாரணையில், கடந்த ஆண்டு அரையாண்டு விடுமுறையில் இருந்த போது, அவரது தந்தை கருப்பசாமி குடிபோதையில் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்தது தெரியவந்தது. மேலும் வெளியில் சொன்னால் கொலை செய்து விடுவதாக கூறி தொடர்ந்து மிரட்டி பாலியல் தொந்தரவு செய்துள்ளார் என்பது தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து கருப்பசாமியை போலீசார் தேடி வந்தனர்.


மக்கள் கருத்து

அருண்Jul 16, 2020 - 07:22:33 PM | Posted IP 162.1*****

குடி குடியை கெடுக்கும்

KalairajanJul 16, 2020 - 05:31:44 PM | Posted IP 162.1*****

கலியுகம் முற்ற ஆரம்பித்து விட்டது

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored AdsBlack Forest Cakes

Anbu CommunicationsThoothukudi Business Directory