» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

சோதனை சாவடியில் காரில் துப்பாக்கியுடன் வந்த 3 பேர் கைது : கோவில்பட்டியில் பரபரப்பு

வியாழன் 16, ஜூலை 2020 10:49:10 AM (IST)



கோவில்பட்டி சோதனைச்சாவடியில் காரில் துப்பாக்கியுடன் வந்த 3பேர் கைது செய்யப்பட்டனர்.

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி சோதனைச் சாவடியில் நேற்றிரவு கிழக்கு காவல் நிலைய உதவி ஆய்வாளர் இசக்கிராஜா தலைமையிலான போலீசார் சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது ஒரு காரில் வந்த 3 பேரை சோதனை செய்த போது ஒரு துப்பாக்கி , 5 தோட்டா மற்றும் இரண்டு அரிவாள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.  இதையடுத்து போலீசார் 3 பேரையும் கைது செய்து கிழக்கு காவல் நிலையத்தில் வைத்து விசாரணை நடத்தியதில் அவர்கள் நெல்லையைச் சேர்ந்த ராஜ்குமார், வினோத் மற்றும் சுரேந்தர் என்பது தெரியவந்தது. 

இதில் ராஜ்குமார் மீது பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளதாக கூறப்படுகிறது. கோவில்பட்டி காவல் நிலையத்தில் வைத்து ராஜ்குமார் உள்ளிட்ட மூன்று பேரிடம், டிஎஸ்பி கலைகதிரவன் தலைமையிலான போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


மக்கள் கருத்து

குழந்தை வேல்Jul 17, 2020 - 12:56:54 PM | Posted IP 162.1*****

முழு ஊரடங்கு காலத்தின் பின்னர் கிடைக்கும் பிஸ்கட் மற்றும் பிற தின்பண்டங்கள் தரம் குறைந்துள்ளது குறித்து எழுதவும்.

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


Anbu Communications

Black Forest Cakes








Thoothukudi Business Directory