» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

பத்திரிகையாளர் மன்ற உறுப்பினர்களுக்கு நிவாரண பொருட்கள் : எஸ்.பி. ஜெயக்குமார் வழங்கினார்

வியாழன் 9, ஜூலை 2020 7:25:05 PM (IST)தூத்துக்குடி பத்திரிகையாளர் மன்ற உறுப்பினர்களுக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ்.பி. ஜெயக்குமார் நோய் எதிர்ப்பு சக்தி உபகரணம் மற்றும்  நிவாரண பொருட்கள் வழங்கினார்.

கொரோனா தொற்று காரணமாக  ஊரடங்கு அமுலில் இருந்து வரும் நிலையில் தூத்துக்குடி பிரஸ் கிளப் உறுப்பினர்களுக்கு தூத்துக்குடி பத்திரிகையாளர் மன்றத்தில் வைத்து அடுத்த கட்டமாக இன்று நிவாரண பொருள் வழங்கும்  நிகழ்ச்சியில் இன்று நடைபெற்றது. கொரோனா நோய் எதிர்ப்பு சக்தியாக விளங்கும் ஆர்சனிக் ஆல்பம் 30 மாத்திரை மற்றும் சித்தா மருத்துவதுறையின் கபசுர பொடி பாக்கெட்  முககவசம், வாழைப்பழம், பிஸ்தா பருப்பு போன்ற பொருட்களுடன் அரிசி பை, உள்ளிட்ட தொகுப்புகளை தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் வழங்கினார். 

இதில் மன்ற தலைவர் சண்முகசுந்தரம், செயலாளர் பிரபாகரன், பொருளாளர் சீனிவாசன், துணைத்தலைவர் ராஜேஷ், இணைச்செயலாளர் ஜாய்சன், கௌரவ ஆலோசகர்கள் அருண், வசீகரன், அன்பழகன், மற்றும் செயற்குழு உறுப்பினர் ஆத்திமுத்து, ராஜாசாலமோன், காதர், இசக்கி ராஜா, ஜெகதீஸ், மோகன்ராஜ், பாஞ்சை கோபால்சாமி, உள்பட பலர் கலந்து கொண்டனர்.

இந்த நிகழ்ச்சியில் டவுன் டிஎஸ்பி கணேஷ், மத்திய பாகம் ஆய்வாளர் ஜெயபிரகாஷ், தென்பாகம் கிருஷ்ண குமார் போக்குவரத்து ஆய்வாளர் மயிலேறும் பெருமாள், சப்-இன்ஸ்பெக்டர்கள் ராஜாமணி, சங்கர், போக்குவரத்து உதவி ஆய்வாளர் வெங்கடேஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored AdsBlack Forest CakesAnbu Communications

Thoothukudi Business Directory