» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

காவல்துறையினருக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி : மாவட்ட எஸ்.பி., பங்கேற்பு

வியாழன் 9, ஜூலை 2020 6:49:18 PM (IST)


தூத்துக்குடி மாவட்ட காவல்துறையினருக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி மாவட்ட எஸ்பி., ஜெயக்குமார் தலைமையில் இன்று மாவட்ட காவல்துறை அலுவலகத்தில் நடைபெற்றது.

தூத்துக்குடி மாவட்ட எஸ்பி., ஜெயக்குமார் தினந்தோறும் மாவட்டத்தில் உள்ள காவல்துறையினரை பகுதி பகுதியாக பிரித்து, அனைத்து காவல் நிலையங்களிலிருந்தும் காவல் ஆய்வாளர்கள், உதவி ஆய்வாளர்கள், தலைமை காவலர்கள் மற்றும் காவலர்கள் உட்பட சுமார் 50 பேருக்கு திறன் மேம்பாட்டு பயிற்சியளிக்க உத்தரவிட்டுள்ளார். அதன்படி இன்று மாவட்ட காவல்துறை அலுவலக வளாக கூட்ட அரங்கில் பயிற்சி நடைபெற்றது. இப்பயிற்சியில் தூத்துக்குடி மாவட்ட எஸ்பி., ஜெயக்குமார் காவல்துறை ஆளினர்களிடம், காவல்துறையினர் பொதுமக்களிடம் கனிவுடன் நடந்து கொள்ளவேண்டும், சட்டத்திற்குட்பட்டே காவல் நிலைய பணிகளை மேற்கொள்ள வேண்டும்.

பொதுமக்களிடமிருந்து பெறப்படும் புகார்களுக்கு கால தாமதமில்லாமல் உடனடியாக சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும், வழக்கில் எதிரிகளை கைது செய்யும்போது உச்ச நீதிமன்ற கட்டளைகளை கடைபிடிக்க வேண்டும், காவல்துறையினர் எவ்வித மன அழுத்தமும் இல்லாமல் பணியாற்றுவதற்கு என்னென்ன வழிமுறைகளை கடை பிடிக்க வேண்டும், தற்போதை கொரோனா தொற்று அதிகமாக உள்ள நிலையில், அது பாதிக்காமல் இருப்பதற்கு முகக்கவசம் அணிதல், சமூக இடைவெளியை கடைபிடித்தல், அடிக்கடி கைகளை சோப்பு மற்றும் கிருமி நாசினி கொண்டு சுத்தம் செய்வது போன்றவற்றையும் எடுத்துரைத்தார். இப்பயிற்சியில் காவல்துறை கூடுதல் கண்காணிப்பாளர்  செல்வன், மன நல மருத்துவர் சிவசைலம் மற்றும் காவல்துறையினர் கலந்து கொண்டனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored AdsBlack Forest Cakes

Anbu CommunicationsThoothukudi Business Directory