» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

கரோனா பரவலை தடுக்க 5 நாட்கள் முழு கடையடைப்பு : கோவில்பட்டி வணிகர் சங்கம் அறிவிப்பு

வியாழன் 9, ஜூலை 2020 5:46:06 PM (IST)

கோவில்பட்டியில் கரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்தும் வகையில் வருகிற 11ம் தேதி (சனிக்கிழமை) முதல் 5 நாட்களுக்கு கடைகள் அடைக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

இது தொடர்பாக தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தூத்துக்குடி வடக்கு மாவட்டம் (கோவில்பட்டி) சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கை:  கோவில்பட்டி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கரோனா வைரஸ் தொற்றால் பொதுமக்கள் மற்றும் வணிகர்கள் பாதிக்கப்பட்டுள்ளார்கள். 

மேலும் தினம், தினம் தொற்று அதிகரிப்பதால் பொதுமக்கள் மற்றும் வணிகர்களின் நலன் கருதி கோவில்பட்டி நகராட்சி நோய் தடுப்பு நடவடிக்கைகளுக்கு ஒத்துழைப்பு தருவதற்காகவும் அத்தியாவசிய கடைகளான காய்கறி கடைகள், மருந்துக் கடைகள், பால் கடைகள், தவிர மற்ற கடைகள் அனைத்து கடைகளும் 5 நாட்கள் 11.07.2020 சனிக்கிழமை முதல் 15.07.2020 புதன்கிழமை வரை முழு நேர கடையடைப்பு செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதற்கு வணிகர்கள், பொதுமக்கள் ஆதரவு தரும்படி கேட்டுக் கொள்கிறோம். இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


Anbu Communications

Black Forest Cakes
Thoothukudi Business Directory