» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தந்தை மகன் கொலை தொடர்பாக சி.பி.ஐ. விசாரணை: அதிகாரிகள் நாளை தமிழகம் வருகை

வியாழன் 9, ஜூலை 2020 5:06:57 PM (IST)

சாத்தான்குளத்தில் போலீஸ் கஸ்டடியில் இருந்த தந்தை மகன் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்துவதற்காக நாளை சி.பி.ஐ. அதிகாரிகள் 7 பேர் தமிழகம் வருகின்றனர்.

தூத்துக்குடி மாவட்டம்,  சாத்தான்குளம் காவல் நிலையத்தில் போலீசார் நடத்திய தாக்குதலில் தந்தை-மகனான ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸ் ஆகிய இருவரும் உயிரிழந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இது தொடர்பாக உயர்நீதிமன்ற மதுரைக்கிளை தாமாக முன்வந்து வழக்கு பதிவு செய்தது. பின்னர் சி.பி.சி.ஐ.டி. போலீசார் நடத்திய விசாரணையில் முதற்கட்டமாக 5 போலீசார் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

அதனைத் தொடர்ந்து நேற்று மேலும் 5 காவலர்களை சி.பி.சி.ஐ.டி. போலீசார் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட 10 பேர் மீதும் கொலை உள்ளிட்ட 3 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கிடையில் இந்த வழக்கு தொடர்பான விசாரணை சி.பி.ஐ. வசம் ஒப்படைக்கப்படும் என தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார்.

இது தொடர்பாக மத்திய அரசிடம் தமிழக அரசு கோரிக்கை விடுத்ததை தொடர்ந்து, இந்த வழக்கில் சி.பி.ஐ. விசாரணையை தொடங்க மத்திய அரசு அனுமதி அளித்தது. தற்போது இந்த வழக்கு குறித்து உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் விசாரணை நடைபெற்று வருகிறது. சாத்தான்குளம் காவல்நிலையம், கிளை சிறை, மருத்துவமனை உள்ளிட்ட இடங்களில் ஆவணங்கள், பொருட்கள் உள்ளிட்ட முக்கிய ஆதாரங்களை சி.பி.சி.ஐ.டி. போலீசாரால் கைப்பற்றப்பட்டுள்ளது.

இந்நிலையில் தற்போது இந்த வழக்கு விசாரணை சி.பி.ஐ. வசம் ஒப்படைக்கப்பட உள்ளது. விசாரணை நாளை தொடங்கப்பட இருக்கும் நிலையில், சி.பி.ஐ. அதிகாரிகள் 7 பேர் நாளை காலை சிறப்பு விமானத்தில் டெல்லியிலிருந்து மதுரை வருகிறார்கள். இதுவரை இந்த வழக்கு தொடர்பாக கைப்பற்றப்பட்டுள்ள ஆதாரங்கள் குறித்து ஆய்வு செய்த பின்னர் அவர்கள் விசாரணையை தொடங்குவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Black Forest Cakes

Anbu Communications

Thoothukudi Business Directory