» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

பிரண்ட்ஸ் ஆப் போலீசிற்கு சட்ட ரீதியான அங்கீகாரம் இருக்கிறதா? -மனித உரிமை ஆணையம் கேள்வி

செவ்வாய் 7, ஜூலை 2020 4:33:12 PM (IST)

சாத்தான்குளம் விவகாரத்தில் பிரண்ட்ஸ் ஆப் போலீஸ் செயல்பாடு குறித்து பதிலளிக்கும்படி மாநில மனித உரிமை ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில் போலீசாரால் தாக்கப்பட்ட தந்தை, மகன் உயிரிழந்த சம்பவம் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. தந்தை, மகன் காவல்நிலையத்தில் தாக்கப்பட்ட விவகாரத்தில் பிரண்ட்ஸ் ஆப் போலீஸ் படையினரும் உடன் தாக்கியதாக குற்றச்சாட்டு எழுந்த நிலையில், மதுரை உட்பட பல்வேறு மாவட்டங்களில் பிரண்ட்ஸ் ஆப் போலீஸ் படைக்கு தற்காலிக தடை விதிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், பிரண்ட்ஸ் ஆஃப் போலீஸ் அமைப்பிற்கு சட்ட ரீதியான அங்கீகாரம் இருக்கிறதா? என்றும், சாத்தான்குளம் விவகாரத்தில் பிரண்ட்ஸ் ஆப் போலீஸ் செயல்பாடு என்ன? என்றும் மாநில மனித உரிமை ஆணையம் கேள்வி எழுப்பி உள்ளது. இதற்கு 4 வாரத்தில் பதிலளிக்கும்படி டி.ஜி.பிக்கு மாநில மனித உரிமை ஆணையம் உத்தரவு பிறப்பித்துள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Anbu Communications


Black Forest Cakes
Thoothukudi Business Directory