» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடியில் கரோனா பாதித்த பெண் உயிரிழப்பு

செவ்வாய் 7, ஜூலை 2020 2:30:28 PM (IST)



தூத்துக்குடியில் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த பெண் உயிரிழந்தார்.

தூத்துக்குடி பிரையண்ட் நகரைச் சேர்ந்த சங்கரநாராயணன் என்பவரது மனைவி மீனா (53) இவர், உடல் நலம் பாதிக்கப்பட்டு தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு காய்ச்சல் முன் சிகிச்சைப் பிரிவில் கரோனா தொற்றுக்கான மாதிரிகள் சேகரிக்கப்பட்டு பரிசோதனைக்கு அனுப்பப்பட்டது. இதில் கரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டது. இதை தொடர்ந்து கரோனா சிகிச்சை பெற்று வந்த அவர் இன்று காலை திடீரென உயிரிழந்தார்.

இது குறித்த தகவல் அவரது குடும்பத்தினர்,  உறவினர்களுக்கு தெரிவிக்கப்பட்டது. தொடர்ந்து அவரது உடல், உறவினர் ஒப்புதல் பெறப்பட்டு மாநகராட்சி மூலமாக இன்று பிற்பகல் 2 மணியளவில் நல்லடக்கம் செய்யப்பட்டது. இதனால் தூத்துக்குடியில் கரோனாவுக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 11ஆக உயர்ந்துள்ளது.  இன்று காலை 8 மணி நிலவரப்படி 321 பேர் கரோனா தொற்றால்  பாதிக்கப்பட்டு உள்நோயாளிகளாக சிகிச்சை பெற்று வருவதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


Anbu Communications






Black Forest Cakes



Thoothukudi Business Directory