» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

விளாத்திகுளத்தில் 44 வியாபாரிகளுக்கு கரோனா தொற்று உறுதி : கடைகள் அடைப்பு!!

செவ்வாய் 7, ஜூலை 2020 12:54:23 PM (IST)

விளாத்திகுளம் பகுதியில் 44 வியாபாரிகளுக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதால் அப்பகுதியில் கடைகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. 

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே உள்ள விளாத்திகுளத்தில் மாவட்ட ஆட்சியரின் உத்தரவின் பெயரில் கடந்த 4ம் தேதி வியாபாரிகளுக்கு கரோனா தொற்று பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் நேற்று 24 பேருக்கும், இன்று 20 பேருக்கும் என 44 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து விளாத்திகுளம் பேருராட்சி, கே.சுப்பிரமணியபுரம், கரிசல்குளம் ஆகிய பகுதிகளில் இன்று முதல் மூன்று நாளைக்கு அனைத்து கடைகளயும்  அடைக்க வருவாய் துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.

இதையெடுத்து இன்று விளாத்திகுளம் பகுதியில் அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டுள்ளன. மெடிக்கல் மற்றும் பால் விற்பனைக்கு மட்டும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. 44 வியாபாரிகளுடன் தொடர்பில் இருந்தவர்கள் தனிமைப் படுத்திக் கொள்வது மட்டுமின்றி, கரோனா பரிசோதனை செய்து கொள்ள அறிவுறுத்தப்பட்டனர். மேலும் விளாத்திகுளம் மார்க்கெட் பகுதி தடை செய்யப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் வழக்கம் போல மக்கள் நடமாட்டம் அதிகமாக காணப்படுகிறது. நேற்றை வியாபாரிகளுக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் விளாத்திகுளம் பேரூராட்சி நிர்வாகம் எவ்வித சுகாதார பணிகளை மேற்கொள்ளவில்லை என்ற குற்றச்சாட்டும் எழுந்துள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads
Black Forest Cakes
Anbu CommunicationsThoothukudi Business Directory