» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடியில் காவல்துறையினருக்கு யோகா பயிற்சி: எஸ்பி ஜெயக்குமார் தலைமையில் நடைபெற்றது!

செவ்வாய் 7, ஜூலை 2020 12:44:01 PM (IST)தூத்துக்குடியில் எஸ்பி எஸ். ஜெயக்குமார் தலைமையில் மாவட்ட காவல்துறை அலுவலக மைதானத்தில் இன்று காவல்துறையினருக்கு யோகா பயிற்சியும், உதவி ஆய்வாளர்களுக்கு மன அழுத்தத்தை போக்குவதற்கு மன அழுத்த மேலாண்மை பயிற்சியும் வழங்கப்பட்டது.

கரோனா வைரஸ் தொற்றை எதிர்கொள்வதற்கு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பது மிக முக்கியமானதாகும். எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதற்கான வழிகளில் யோகா பயிற்சியும் ஒன்றாகும். அதோடு மட்டுமல்லாமல் உடல் மற்றும் மன ஆரோக்கியத்தை கொடுக்கக்கூடியதாகும். ஆகவே மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். ஜெயக்குமார் தூத்துக்குடி மாவட்ட காவல்துறையினருக்கு யோகா பயிற்சியளிக்க உத்தரவிட்டார்.

அவரது உத்தரவின்பேரில் தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள 50 சட்டம் ஒழுங்கு மற்றும் ஆயுதப்படை காவலர்கள் வரவழைக்கப்பட்டு இன்று (07.07.2020) காலை தூத்துக்குடி மாவட்ட காவல்துறை அலுவலக மைதானத்தில் தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். ஜெயக்குமார் தலைமையில் யோகா பயிற்சி நடைபெற்றது. பின் அனைவருக்கும் கப சுரக்குடிநீர் வழங்கப்பட்டது. இப்பயிற்சியில் சிப்காட் காவல் ஆய்வாளர் முத்துசுப்பிரமணியன், வடபாகம் குற்றப்பரிவு காவல் ஆய்வாளர் பிரபாவதி, ஆயுதப்படை உதவி ஆய்வாளர்கள் கிருஷ்ணமூர்த்தி, சுனை முருகன், தலைமை காவலர்கள் மற்றும் காவலர்கள் கலந்து கொண்டனர்.இப்பயிற்சிக்கான ஏற்பாடுகளை தூத்துக்குடி ஆயுதப்படை காவல் ஆய்வாளர் ஜாகிர் உசேன், உதவி ஆய்வாளர்கள் மணிகண்டன், தலைமை காவலர் ராஜா ஆகியோர் செய்திருந்தனர். இப்பயிற்சியை யோகாவில் தேர்ச்சி பெற்ற முதல் நிலைக் காவலர் ராஜலிங்கம் கற்றுக்கொடுத்தார். மேலும் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள சுமார் 25 உதவி ஆய்வாளர்களுக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். ஜெயக்குமார் தலைமையில் மன அழுத்தத்தை குறைப்பதற்கு மன அழுத்த மேலாண்மை பயிற்சியும் வழங்கப்பட்டது.


மக்கள் கருத்து

இவன்Jul 7, 2020 - 04:48:02 PM | Posted IP 173.2*****

வேலை நேரத்தை குறைத்தால் மட்டும் தீர்வு ...

M.sundaramJul 7, 2020 - 03:28:52 PM | Posted IP 108.1*****

The mental attitude of the police personnel has to be changed. Yoga is good for health . I have some reservation how yoga is going to change their mental attitude towards the public either inside the police station or in public place. Still we can notice that the police veh is parked in public place against the traffic rule. Still police personnel are driving police veh without the seat belt and mask. The police personnel driving the two wheeler with out helmet and mask. They should conduct them self in a disciplined manner and show a role model to the public.

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Black Forest Cakes


Anbu Communications
Thoothukudi Business Directory