» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

கே.வி.கே., நகரை கண்டுகொள்ளாத மாநகராட்சி நிர்வாகம் : பொதுமக்கள் வேதனை

செவ்வாய் 7, ஜூலை 2020 11:51:25 AM (IST)தூத்துக்குடி கேவிகே நகர் பகுதியில் பழுதடைந்துள்ள சாலை, மற்றும் கழிவு நீர்கால்வாயை சீரமைக்க மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

தூத்துக்குடி மாநகராட்சியில் உள்ள 39வது வார்டு பகுதியான கே.வி.கே. நகர் கிழக்கு, மேற்கு, மகிழ்ச்சிபுரம் உள்ளிட்ட பகுதிகளில் கடந்த 15 ஆண்டுகளாக சாலைகள் சீரமைக்கப்படாமல் பழுதடைந்து உள்ளது. இதுகுறித்து அப்பகுதி மக்கள் மாநகராட்சி அலுவலகத்தில் பலமுறை மனு அளித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. பல ஆண்டுகளுக்கு முன்பு பாதாள சாக்கடை பணிக்காக தோண்டப்பட்ட குழிகள் முறையாக மூடப்படாமல், சாலைகள் குண்டும் குழியுமாக காணப்படுகிறது. இதனால் டூவிலர், ஆட்டோ, உள்ளிட்ட வாகனங்களில் செல்வோரும், நடந்து செல்லும் பொதுமக்களும் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகின்றனர்.

மேலும் தூத்துக்குடி 4வது ரயில்வே கேட் அருகே, கேவிகே நகரின் வடபுறத்தில் கழிவுநீர் கால்வாய்  பக்கிள் ஓடையில் இணைக்கப்படாமல் உள்ளது. இதனால் அப்பகுதியில் கழிவு நீர் தேங்கி சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது. கொசு தொல்லையால் மக்கள் அவதிப்படுகின்றனர். இதுபோல் அண்ணா நகர் 12வது தெரு, கேவி நகரை இணைக்கும் சிறிய குறுத்தெருவில் கால்வாய் உடைந்து 3ஆண்டுகளாகியும் சீரமைக்கப்படாமல் உள்ளது. பிரதான தெருவில் குடிநீர் வால்வு திறப்புக்காக அமைக்கப்பட்ட தொட்டி உடைந்து மூடப்படாமல் உள்ளது. இதனால் அப்பகுதியில் செல்லம் குழந்தைகள் தவறி விழுந்து விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. இது தொடர்பாக மாநகராட்சி ஆணையர் ஜெயசீலன் நேரடியாக ஆய்வு செய்து அப்பகுதி மக்களின் நீண்ட நாள் கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது. மக்கள் கருத்து

உண்மJul 7, 2020 - 04:45:38 PM | Posted IP 173.2*****

மாநகராட்சிக்கு சாக்கடை அமைக்க/ உருவாக்க , கொசுக்களை பெருக மட்டும் தெரியும் வேற ஒன்னும் தெரியாது

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


Anbu Communications

Black Forest Cakes
Thoothukudi Business Directory