» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடியில் கண்டக்டருடன் இளம்பெண் மாயம் : போலீஸ் விசாரணை

ஞாயிறு 5, ஜூலை 2020 12:27:01 PM (IST)

தூத்துக்குடியில் கண்டக்டருடன் இளம்பெண் மாயமானது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தூத்துக்குடி ஹவுசிங் போர்டு காலனியை சேர்ந்தவர் முகமது அலியாஸ் என்பவரது மகள் ரசிதாபானு (20). இவர் கல்லூரியில் படித்து வந்துள்ளார். தினமும் கல்லூரிக்கு மினிபஸ்சில் சென்று வருவது வழக்கமாம். சம்பவத்தன்று ரசிதாபானு வீட்டை விட்டு மாயமானார். இது குறித்து அவரது தகப்பனார் சிப்காட் போலீசில் புகாரளித்தார்.

இன்ஸ்பெக்டர் முத்துசுப்பிரமணியன் வழக்குப்பதிந்து முதற்கட்ட விசாரணை நடத்தியதில்,  ரசிதாபானு  மினிபஸ்சில் சென்று வரும் போது மினிபஸ் கண்டக்டரான நாங்குநேரியை சேர்ந்த முத்துவேல் (25) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டு இருவரும் காதலித்து வந்ததாக தெரிகிறது. ரசிதாபானு, முத்துவேலுடன் மாயமானாராம். தொடர்ந்து போலீசார் இது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Black Forest Cakes







Anbu Communications



Thoothukudi Business Directory